மாநாடு 23 August 2022
தமிழக அரசு நாள்தோறும் புதுப்புது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது, அதை ஊடகங்களின் வாயிலாக பொதுமக்களும் அறிய முடிகிறது, அதன்படி இன்று தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது,
இனி மாணவர்கள் தங்களது பெயரை தமிழில் தான் எழுத வேண்டும், தமிழில் தான் கையொப்பம் இட வேண்டும், பெயருக்கு முன் பெயரின் முதல் எழுத்தை தமிழில் தான் எழுத வேண்டும் அதேபோல ஆசிரியர்களும் பதிவேடுகளில் தமிழில் தான் கையொப்பமிட வேண்டும், பெயர்களை எழுத வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
இதனை சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பெரிதும் வரவேற்று மகிழ்கின்றனர் அதேவேளை பல உத்தரவுகளை போல இதுவும் வெறும் எழுத்தில் இல்லாமல் செயலில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய திமுகவின் அமைச்சர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் இதே போல ஒரு உத்தரவை பிறப்பித்து அதை நடைமுறைப்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்கிறார்கள் பொதுமக்கள்.
திமுகவில் பல அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பெயர்களை ஆங்கிலத்தில் தான் வைத்திருக்கிறார்கள், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் எனில் பி.டி.ஆர், டிஆர்பி.ராஜா, போன்ற பலரையும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டால் மட்டும் தான் அனைவருக்கும் தெரியும் படி இருக்கிறது. இதனையும் மாற்ற வேண்டும். மாற்றுமா ஏமாற்றுமா தமிழக அரசு பொறுத்திருந்து பார்ப்போம்.