Spread the love

மாநாடு 23 August 2022

காவல் அறனாய் காக்கி உடையில் பொதுமக்களை காவல் காக்கும் காவல் தெய்வங்களாய் கண்ணியம் மிக்க காவலர்கள் பலரும் காவல்துறையில் இருக்கின்றார்கள், இவர்களின் மனிதாபிமானம் பல நேரங்களில் பலருக்கும் தெரியும் வகையில் வெளிப்பட்டிருக்கிறது, அதை பல நேரங்களில் வெளியே தெரியாமல் தன் கைதி ஆனாலும் அவர்களையும் கருணையோடு பார்க்கின்ற காவலர்கள் ஏராளமானோர் உண்டு.

காவல்துறையிலும் அவர்களின் கண்ணியத்தை குறைக்கும் பல கருப்பு ஆடுகளும் உண்டு. அதே நேரத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட பெண் காவலர் ஒருவருக்கு சக காவலர்கள் காவல் நிலையத்தில் வைத்து ணி வளைகாப்பு விழா நடத்தினார்கள். இந்த செய்தி பரவி பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை உண்டு பண்ணியது,அதேபோல பல காவலர்கள் மாணவ மாணவியரை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நமது மாநாடு இதற்காக செய்தி சேகரிக்க செல்லும்போது பலமுறை பல நல்ல நிகழ்வுகளை காவலர்கள் செய்வதை கண்டு அதனை பலமுறை செய்தியாகவும் நமது இதழில் வெளியிட்டும் இருக்கிறோம்.

அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அய்யம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் இவர் கடந்த 1993ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்திருக்கிறார். இவருக்கு தனரேகா என்கிற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றார்கள் ஜெகன் பி.இ., மூன்றாம் ஆண்டும், ஆதித்யா என்கிற மகன் 12 ஆம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

தஞ்சாவூர் நகர போக்குவரத்து புலன் விசாரணை பிரிவில் முருகேசன் பணியாற்றி வந்திருக்கிறார், கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து முருகேசன் பணியில் சேர்ந்த அதே ஆண்டில் பணியில் சேர்ந்த சக காவலர்கள் 7.06 லட்சம் ரூபாய் நிதி திரட்டினார்.

திரட்டிய நிதியை தஞ்சாவூர் மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிப்ரியா மூலம் முருகேசன் குடும்பத்தினரிடம் வழங்கி, ஆறுதல் கூறினார்கள்.

இதுகுறித்து நிதியுதவி அளித்த காவலர்கள் கூறியதாவது; தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக முதல் முதலாக, இரண்டாம் நிலை காவலராக 1993ம் ஆண்டு தேர்வான, சுமார் 3, 500 காவலர்கள் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வருகிறோம். நாங்கள் ஒன்றிணைந்து காக்கும் கரங்கள் என்கிற வாட்ஸ்அப் குழு அமைத்துள்ளோம் அதன் மூலம் கடந்த 2019ம் ஆண்டு முதல், இறந்த 50 காவலர் குடும்பங்களுக்கு இதுவரை 2.86 கோடி ரூபாயை வழங்கியுள்ளோம். இதன்படி, தற்போது கடந்த 3 மாதங்களில் மறைந்த 5 காவலர்கள் குடும்பத்திற்கு தலா 7.06 லட்சம் வீதம் வழங்க உள்ளோம். அதில் முதற் கட்டமாக முருகேசன் குடும்பத்திற்கு வழங்கியுள்ளோம் என்று தெரிவித்தார்கள். சக மனிதன் சக மனிதனுக்கு தோள் கொடுக்கும் போது தான் மனிதம் தலைக்கிறது இதனை மெய்ப்பிக்கும் வகையில் நடந்து கொண்ட தஞ்சையை சேர்ந்த காவல்துறையினருக்கு நமது மாநாடு இதழின் வாழ்த்துக்கள்.

48200cookie-checkதஞ்சாவூரில் நெகிழ வைத்த காவலர்களுக்கு பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!