Spread the love

மாநாடு 29 August 2022

1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி சென்னை ராபின்சன் பூங்காவில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கப்பட்டது, திமுக துவங்கப்பட்ட போது திராவிட இன மக்களின் உரிமையை பாதுகாத்திடவும் ,ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்திடவும் பாடுபடுவோம் என்கின்ற முழக்கத்தை முதன்மை முழக்கமாக முன் வைத்தது.

திமுகவின் முதல் பொதுச் செயலாளராக அண்ணாதுரை தேர்வு செய்யப்பட்டார், அதன் பிறகு நமது கட்சியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்தி விடக்கூடாது என்பதற்காகவும், கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களில் யார் வேண்டுமென்றாலும் உட்கட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அந்தப் பதவிகளில் அமரலாம் என்று தீர்மானிக்கப்பட்டு அண்ணாவால் முன்மொழியப்பட்டது அதனடிப்படையில் திமுகவில் உட்கட்சித் தேர்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

1969 ஆம் ஆண்டு அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வரை மு. கருணாநிதியே திமுகவின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இருந்த போதும்.

அனைத்து தேர்தல்களிலும் அனைத்து பொறுப்புகளுக்கும், வேட்பு மனுக்கள் வாங்கப்படும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுவார்கள் பெட்டி வைத்து தேர்தல்கள் நடத்தப்படும், தொண்டர்கள் வாக்களிப்பார்கள், இப்படித்தான் திமுகவில் உட்கட்சித் தேர்தல்கள் நடைபெற்று வந்தன. அப்போதெல்லாம் திமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிட போட்டியாளர்கள் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள் அது திமுகவின் வளர்ச்சிக்கு போட்டி போட்டு வேலை செய்யும் மனப்பான்மையை தொண்டர்களிடம் தொடர்ந்து வளர்த்து வந்தது.அதன் காரணமாக தான் ஏறக்குறைய 15 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத போதும் திமுகவின் தொண்டர்கள் அதே வீரியத்தோடு இருந்து வந்தார்கள். இப்படியான திமுகவில் தற்போது நடைபெற்று இருக்கும் உட்கட்சித் தேர்தல் என்பது முறையாக நடத்தப்படவில்லை என்கிறார்கள் திமுகவின் உண்மை அடிப்படை தொண்டர்கள்.

திமுக தொண்டர்கள் சிலரிடம் பேசினோம்: முதலில் பேசத் தயங்கினார்கள் திமுகவின் தொண்டராக இருந்து கொண்டு நீங்கள் உங்கள் கருத்துக்களை வெளியிட கூட தயங்கலாமா என்றோம் ,அதன் பிறகு மெல்ல மெல்ல எங்கள் பெயரை குறிப்பிடாமல் இருந்தால் பேசத் தயார் என்றார்கள் அந்த உடன்பிறப்புகள் எங்களுக்குள் உடன்பாடானது பேசத் தொடங்கினோம்.

அதன்படி உட்கட்சி ஜனநாயகம் திமுகவில் தஞ்சாவூரில் மட்டும் நான் மீறப்பட்டிருக்கிறதா என்றோம் ?அதற்கு அவர்கள் தஞ்சாவூரில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் பல இடங்களில் மீறப்பட்டிருக்கிறது. உதாரணமாக தஞ்சாவூரை பார்ப்போம் என்றார்கள். அதாவது பொதுவாக திமுகவில் ஒவ்வொரு பொறுப்புமே தங்களுக்கு வழங்கப்படும் மாபெரும் அங்கீகாரமாக தான் ஒவ்வொரு திமுக தொண்டனும் நினைப்பான். இவ்வளவு மேன்மையாக கருதப்படும் உட்கட்சித் தேர்தல்கள் தற்போது திமுகவில் கேலிக்கூத்தாக மாறிக்கொண்டிருக்கிறது என்றார்கள்.

கொஞ்சம் விளக்கமாக மக்களுக்கு புரியும்படி சொல்லுங்கள் என்றோம், தொடர்ந்தார்கள் அதாவது தேர்தல் என்றால் வேட்பு மனுக்கள் வாங்கப்படும் வாக்கு செலுத்தப்படும் வாக்குகள் என்னப்படும் யார் வெற்றி பெற்றார்களோ அவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்படும் அதுதானே தேர்தல் என்றார்கள் நாம் ஆம் என்றோம்,

ஆனால் தஞ்சாவூரில் திமுகவில் அப்படி எதுவும் தேர்தல் நடைபெறவில்லை தற்போது மேயராக உள்ள சண்.ராமநாதன் இப்போது வரை அவர்தான் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், மேலும் தற்போது அவர்தான் மாநகர செயலாளர், இன்னும் ஓரிரு மாதத்தில் மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல் வர இருகிறது அதிலும் கூட தஞ்சாவூரின் மாவட்ட செயலாளராக சண்.ராமநாதன் அறிவிக்கப்பட கூட வாய்ப்பு இருக்கிறது, ஏனென்றால் தற்போது மேயராக இருப்பதுவும் தலைமையால் நியமிக்கப்பட்டது தான் போட்டியிட்டு அவர் மேயராக தேர்ந்தெடுக்கப்படவில்லை.

அதேபோல தற்போது அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் மாநகர செயலாளர் பதவியும் கட்சியின் தலைமையால் நியமிக்கப்பட்டது தான் இந்த பதவிக்கும் அவர் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை. அதன்படி பார்க்கும்போது அடுத்து உள்ளது தஞ்சாவூர் திமுகவில் பெரிய பொறுப்பு என்றால் மாவட்ட செயலாளர் பொறுப்பு தான் அதுவும் கூட தேர்தல் நடைபெறாமல் நியமிக்கப்பட கூட வாய்ப்பு இருக்கிறது, அதன்படி பார்க்கும்போது தஞ்சாவூர் திமுகவில் தற்போது வரை இளைஞர் அணி அமைப்பாளர் ,மாநகர செயலாளர், மாநகர தந்தை பொறுப்புமே சண். ராமநாதன் போட்டியிட்டு வென்று வரவில்லை தலைமையின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் நியமிக்கப்பட்ட பொறுப்புகள் தான்.

இப்படியே திமுகவில் தலைவர் ஸ்டாலின் தன் சன்னுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே சண்.ராமநாதன் போன்றவர்களுக்கு பொறுப்புக்கள் வழங்கப்பட்டு வந்தால் கொள்கை கோட்பாடுகளை சொல்லி ராபின்சன் பூங்காவில் ஆரம்பித்த திமுக இந்த சன்களால் சரிவை சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை கட்சிக்காக உண்மையாக உழைக்கும் தொண்டனுக்கு இனி மதிப்பு இல்லைங்க தொண்டர்களை நம்பி கட்சி நடத்திய காலம் மலை ஏறிவிட்டதுங்க இப்போது எல்லாம் டெண்டர் சிஸ்டம் ஆயிடுச்சுங்க என்று ஆதங்கத்தோடு சொல்லி முடித்தார் திமுக உடன்பிறப்பு.

அவர் முடித்த போது நமக்கு இந்த பாடல் தான் நினைவுக்கு வந்தது.

இப்போ ஒம்பது கிரகமும் ஒன்னாக இருக்கு
ஓஹோன்னு நம் ஜாதகம்

ஆடாம ஜெயிச்சோமடா நம் மேனி வாடாமல் ஜெயிச்சோமடா
ஓடாம ரன் எடுத்தோம் சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம்.

இது அம்பானி பரம்பரை அஞ்சாறு தலமுறை
ஆனந்தம் வளர்பிறைதான்
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக்க பலமுறை
கொட்டாதோ பண மழைதான்.

திமுக மாநகரச் செயலாளர் சண். ராமநாதனின் பணிகள் சிறக்க நமது மாநாடு இதழின் வாழ்த்துக்கள்.

48611cookie-checkதஞ்சாவூர் திமுகவில் சண்.ராமநாதனை தவிர யாருக்குமே தகுதி இல்லையா திமுகவினர் குமுறல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!