மாநாடு 31 August 2022
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருக்கின்றார்,அவர் சமீப காலமாக ஓ.பன்னீர் செல்வத்தை கடுமையாக விமர்சித்து கருத்துக்கள் தெரிவித்து வருகிறார். அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைந்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று பேசியதாக கூறப்படுகிறது,அதனை தொடர்ந்து சங்கரன்கோவில் பகுதியில் இருந்து சரவண பாண்டியன் என்பவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு
தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நீங்கள் ஓ பன்னீர் செல்வத்தை அதிமுகவில் மீண்டும் இணைத்தால் தற்கொலை செய்து கொள்வதாக கூறியிருக்கிறீர்கள். நீங்கள் கூறியபடியே சாக முடிவு எடுத்து விட்டால் பாடை கட்டி, மாலை கட்டிக் கொண்டு வந்து தூக்கி செல்ல தயாராக இருப்பதாக பேசியதாக தெரிய வருகிறது,அதனையொட்டி காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது அதன் காரணமாக விசாரணை செய்ததில் தென்காசி மாவட்ட அதிமுக நிர்வாகி தான் இவ்வாறு பேசியது என்பதை கண்டுபிடித்த காவல்துறை சரவண பாண்டியன் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறது .பிரிவு153 கலகத்தை ஏற்படுத்துதல், பிரிவு 505 அவதூறாக பேசுதல் ,மிரட்டல் விடுத்தல் ஆகிய இரண்டு பிரிவுகளில் அய்யாபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஓபிஎஸ் இன் ஆதரவாளரான சரவண பாண்டியனை கைது செய்து இருக்கிறது காவல்துறை.