மாநாடு 2 September 2022
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு பல்வேறு குழப்பங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இருந்த போதும் நான்காண்டு காலம் அதிமுகவை எப்படியோ பல நெருக்கடிகளுக்கு மத்தியில் வழிநடத்தி வந்தார்கள். அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பாக அதிமுகவின் கோடிக்கணக்கான தொண்டர்களின் விருப்பம் ஒற்றை தலைமை என்கிற கருத்து வைக்கப்பட்டு பூதாகரமாக பிரச்சனைகள் வெடித்தது.
அதன் காரணமாக இபிஎஸ் தரப்பு ஒரு புறமும், ஓபிஎஸ் தரப்பு ஒரு புறமும் இருந்து வருகிறார்கள் ,இந்நிலையில் சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பு அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டியது எடப்பாடி பழனிச்சாமியை அந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் ஜே.சி.டி.பிரபாகர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உட்பட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வழி நடப்பு செய்தார்கள். அதனையொட்டி ஓபிஎஸ் உட்பட ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து இபிஎஸ் தரப்பு நீக்கியது.அதன் பிறகு சென்னை அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் தரப்புக்கும் ஓபிஎஸ் தரப்புக்கும் கலவரம் மூண்டது. அதன் காரணமாக அதிமுக அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அலுவலகத்தின் சாவி ஈபிஎஸ்யிடம் கொடுக்கப்பட்டது.
இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பும் இபிஎஸ் தரப்பும் மாறி மாறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது அதில் கடைசியாக வந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் இபிஎஸ் தரப்பு கூட்டிய பொதுக்குழு செல்லாது ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்து செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டார் இந்தத் தீர்ப்பை ஏற்க முடியாது என்று மேல்முறையீடு செய்தது இபிஎஸ் தரப்பு அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இபிஎஸ் தரப்பு கூட்டிய பொது குழு செல்லும் என்று தீர்ப்பளித்து இருக்கிறது இதன் காரணமாக சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இபிஎஸ் வீட்டிற்கு தொண்டர்களும் அவரது ஆதரவாளர்களும் படையெடுத்து வந்து தங்களது மகிழ்வையும் ,ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.அதிமுகவின் செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் இன்னும் மூன்று மாதத்தில் பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிச்சாமியை நிரந்தர பொதுச் செயலாளராக அறிவிப்போம் என்கிறார். அதிமுகவில் நிலவும் குழப்பம் தொண்டர்களை மிகவும் சோர்வடைய செய்திருக்கிறது மீண்டும் மீண்டும் நீதிமன்றம் செல்லாமல் மீண்டும் மீண்டும் நீதிமன்றம் செல்லாமல் மக்கள் மன்றத்தில் ஆக்கப்பூர்வமாக எதிர்க்கட்சியாக செயல்பட்டால் மட்டுமே அதிமுக என்ற ஒரு கட்சி இருந்ததற்கான அடையாளம் அடுத்த தேர்தலில் தெரியும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.