மாநாடு 3 September 2022
மருத்துவம் படிக்க வேண்டும் என்று பல ஏழை குழந்தைகள் கனவு கண்டு அது கிடைக்காத நிலையில் எத்தனையோ குழந்தைகள் நீட் தேர்வாள் தற்கொலைகள் செய்து தங்களது இன்னுயிரை விடுகிறார்கள்.இவ்வாறான போற்றுதலுக்குரிய மருத்துவத்துறை சமீப காலமாக வணிகமயமாக ஆகிவிட்டது, இதன் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை எட்டா கனியாகிவிட்டது, தரமான மருத்துவர்களை உண்டு செய்வதற்கு நீட் தேர்வு முக்கியம் என்று மத்திய அரசு கூறிவரும் இவ்வேளையில் சில தரமற்ற மருத்துவர்களால் தரமான நல்ல மருத்துவர்களுக்கும் கெட்ட பெயர் உண்டாகிறது இதை அடையாளம் கண்டு உடனடியாக மத்திய அரசும், மாநில அரசும் இவ்வாறு முறைகேடுகளில் சேவை குறைபாடுகளில் ஈடுபடும் மருத்துவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் அதேபோல மருத்துவமனையின் அங்கீகாரத்தையும் ரத்து செய்து இழுத்து மூட வேண்டும் அப்போதுதான் மற்ற மருத்துவர்களும் இவ்வாறான அலட்சிய முறைகேடுகளில் ஈடுபடாமல் இருப்பார்கள்.
அதன்படி தஞ்சாவூரில் உள்ள புகழ்பெற்ற அனு மருத்துவமனை தனது அலட்சியத்தால் ஒரு ஏழை குடும்பத்தை மன உளைச்சலுக்கு ஆட்படுத்தி இருக்கிறது இதனால் அந்த குடும்பமே மிகவும் மன வேதனையில் ஏறக்குறைய 16 மாதங்கள் தவித்து இருக்கிறது.
விபரம் பின் வருமாறு: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள ரெஜினா பள்ளியில் சாலிய மங்கலத்தை சேர்ந்த சம்சுதீன் என்பவர் மகள் நூர்ஜகான் பேகம் என்கிற மாணவி படித்து வந்துள்ளார் 22- 6-2016 அன்று இந்தப் பள்ளிக்கூடத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்று இருக்கிறது மருத்துவ முகாமில் மெலட்டூர் அரசு மருத்துவமனை அரசு மருத்துவர் மலர்விழி ரெஜினா பேகத்தை பரிசோதனை செய்துள்ளார் அப்போது ரெஜினா பேகத்தின் இருதயத்தில் வித்தியாசமான சத்தங்கள் கேட்கிறது அதனால் தகுந்த மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியிருக்கிறார் அரசு மருத்துவர் மலர்விழி அதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் புகழ்பெற்ற மருத்துவமனையான அனு மருத்துவமனையில் எக்கோ, இருதயஸ்கேன், எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அனு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட சோதனைகளை ஆராய்ந்த அனு மருத்துவமனை மருத்துவர் இருதயத்தில் சிறிய துவாரங்கள் இருக்கிறது இதனை அறுவை சிகிச்சை செய்து சரி செய்ய 3 லட்ச ரூபாய் செலவாகும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது. நூர்ஜகானின் தந்தையால் உடனடியாக இவ்வளவு தொகையை திரட்ட முடியாத காரணத்தால் அனு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட இருதய ஸ்கேன் மற்றும் எக்கோ ஆகியவற்றிற்கான தொகை 1000 ரூபாயை கொடுத்துவிட்டு மிகுந்த மன உளைச்சலில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு எப்படியாவது தன் மகளுக்கு இருக்கின்ற நோயை அறிந்து சிகிச்சை செய்ய வேண்டும் என்ற தந்தையின் பரிதவிப்பில் 29-6-2016 அன்று தஞ்சாவூரில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் தங்களது மகள் நூர்ஜகான் பேகத்தை பரிசோதனை செய்வதற்காக அழைத்துச் சென்று பரிசோதனை செய்திருக்கிறார்கள் அந்த ஆய்வின் முடிவில் மாணவி நூர்ஜஹான் பேகம் இருதய பிரச்சனை எதுவும் இல்லாமல் நல்ல நிலையில் இருப்பதாக ஆய்வறிக்கை கூறியிருக்கிறது.
அதனை அடுத்து தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் இது சம்பந்தமாக நூர்ஜஹான் பேகத்திற்கு 11-7-2016 அன்று சோதனை செய்திருக்கிறார்கள் சோதனை செய்த ஆய்வறிக்கை 12-7-2016 அன்று கிடைத்திருக்கிறது, அந்த சோதனையிலும் மாணவி நல்ல நிலையில் இருப்பதாக அதாவது நார்மல் என்று அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.
இந்த மருத்துவ ஆய்வு அறிக்கைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் அரசு மருத்துவர் மலர்விழியிடம் சென்று இருக்கிறார்கள் இந்த ஆய்வுகளை பார்த்த அரசு மருத்துவர் மலர்விழி எதற்கும் நான் கடிதம் தருகிறேன் அதனை எடுத்துக் கொண்டு சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் ஆய்வு செய்து விடுங்கள் என்று கூறியதாக தெரிகிறது கடிதத்தை எடுத்துக்கொண்டு ராமச்சந்திர மருத்துவமனையில் நூர்ஜஹான் பேகத்திற்கு மருத்துவ பரிசோதனை செய்திருக்கிறார்கள் அதன் ஆய்வறிக்கையை 26-8-2016 அன்று மருத்துவர் ஜெயராஜ் பார்த்துவிட்டு அவரும் மாணவி நல்ல நிலையில் உள்ளதாக கூறியிருக்கிறார்.
அனு மருத்துவமனையால் தன் மகளை அழைத்துக் கொண்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கும் பல்வேறு ஊர்களுக்கும் சென்றதால் தான் பணிபுரிந்த ஓட்டுனர் வேலையையும் இழந்துவிட்டதாக கூறியிருக்கிறார் நூர்ஜஹான் பேகத்தின் தந்தை சம்சுதீன்.
மேலும் 9-12-2017 அன்று வேறு மருத்துவமனைகளில் நூர்ஜகான் பேகத்தை பரிசோதனை செய்த ஆய்வு அறிக்கைகளை இணைத்து அனு மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு மாணவியின் தந்தை கடிதம் அனுப்பி இருக்கிறார் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட அனு மருத்துவமனை நிர்வாகம் 30-1-2018 அன்று ராமச்சந்திரா மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஸ்கேனில் துவாரம் தெரிகிறது, எங்களிடம் அழைத்து வந்தால் நாங்கள் உங்களுக்கு விளக்குகிறோம் என்று அனு மருத்துவமனை பதில் அளித்து இருக்கிறது,
ஆனால் ஏற்கனவே ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கில் இவ்வாறு தவறான அறிக்கையை கொடுத்த அனு மருத்துவமனையை நம்பி தங்கள் மகளை அழைத்துச் செல்ல பயந்து அழைத்துச் செல்லாமல் இருந்திருக்கிறார்கள் மாணவி நூர்ஜகான் பேகத்தின் பெற்றோர்கள்.
நூர்ஜஹான் பேகத்திற்கு மீண்டும் ஒருமுறை 28-1-2018 அன்று தஞ்சாவூர் சாஸ்திர பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவிற்காக நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் சோதனை செய்யப்பட்டிருக்கிறது அச்சோதனையிலும் நார்மல் என்று ஆய்வறிக்கை கூறியிருக்கிறது.
தங்கள் மகள் நல்ல நிலையில் இருக்கும்போது பணம் பறிக்கும் நோக்கில் முறைகேடுகளில் ஈடுபட்ட அனு மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அனு மருத்துவமனையால் தங்கள் குடும்பம் அடைந்த மன உளைச்சலுக்கும், தொடர்ந்து 16 மாத காலம் தன் மகளுக்கு இருதய பிரச்சனை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக அலைந்ததில் தன் வேலையையும் இழந்து விட்டதாக கூறி தங்களின் மன உளைச்சல், மனக்கஷ்டம், துன்பம் ஏற்பட காரணமாய் இருந்த அனு மருத்துவமனை தங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக 10 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த நுகர்வோர் நீதிமன்றம் நூர்ஜகான் பேகம் மற்ற மருத்துவமனைகள் கூறியது போல எந்த பிரச்சனையும் இல்லாமல் இன்று வரை நல்ல நிலையில் உள்ளார். உண்மை நிலை இப்படி இருக்க அனு மருத்துவமனை நிர்வாகம் தவறாக அறிக்கை கொடுத்ததன் காரணமாக அந்த குடும்பம் மிகுந்த துன்பத்திற்கு ஆட்பட்டிருக்கிறது எனவே அந்த குடும்பத்திற்கு இழப்பீடாக 3 லட்சம் ரூபாயை மருத்துவமனை கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது அதுவும் 24-10-2018 ஆம் தேதியில் இருந்து 13-7-2022 ஆம் தேதி வரை அந்த 3 லட்ச ரூபாய்க்கு வட்டியாக 9 விழுக்காடு சேர்த்து 6 வாரத்திற்குள் கொடுக்க வேண்டும். இந்த காலகெடுக்குள் பணம் கொடுக்க தவறும் பட்சத்தில் ஆண்டு ஒன்றுக்கு 12 விழுக்காடு வட்டியுடன் இழப்பீட்டுத் தொகையாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும் என்றும் மேலும் செலவுத்தொகை 5000 ரூபாயும் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது,
இதனைப் பற்றி சமூக ஆர்வலர்கள் கூறும் போது பல மருத்துவமனைகளில் இவ்வாறான மோசடிகள் தினம் தோறும் நடைபெற்று வருகிறது குறிப்பாக மருத்துவ காப்பீட்டு அட்டையின் மூலம் சிகிச்சை பெறுபவர்களிடம் ரசீது ஏதும் தராமல் கையெழுத்து மட்டும் வாங்கிக் கொண்டு அதில் லட்சக்கணக்கில் சிகிச்சை தொகையாக நிரப்பி கொள்வதாகவும் தெரிய வருகிறது. நோயாளிகளிடமும் நோயாளியோடு இருப்பவர்களிடமும் யாரும் வந்து விசாரித்தால் இவ்வளவு தொகை தந்தோம் என்று நீங்கள் கூறக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுவதாக நம்மிடமே பலரும் கூறியிருக்கிறார்கள்.
அதே வேளையில் மருத்துவம் படிக்க வேண்டும் என்று பெரும் கனவு கண்ட பிள்ளைகள் மருத்துவம் படிக்க முடியாத காரணத்தால் அனிதா போன்ற தரமான குழந்தைகள் தற்கொலைகள் செய்து கொள்கிறார்கள் ஆனால் தரமாற்றவர்கள் மருத்துவர் ஆவது காரணமாக மருத்துவ கொலைகள் மருத்துவ திருட்டுக்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனை தடுக்க அரசு நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் இவ்வாறு ஈடுபட்ட மருத்துவமனையை இழுத்துப் பூட்ட வேண்டும் மருத்துவரின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் மா.சுப்பிரமணியன் இந்த மருத்துவமனை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏனெனில் முதல் முறை தவறாக பரிசோதனை செய்திருந்தாலும் கூட அந்தத் தவறை மீண்டும் மீண்டும் நிரூபிப்பதற்காக மற்ற மருத்துவமனைகளில் எடுத்த ஆய்வுகளை குற்றம் சாட்ட முற்பட்டிருக்கிறது அணு மருத்துவமனை நிர்வாகம். ஒரு வேலை இவர்கள் கேட்ட 3 லட்ச ரூபாய் பணத்தை அந்த ஏழை குடும்பம் கொடுத்திருந்தால் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பார்கள் தானே என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அதுமட்டுமல்லாமல் இதே போல வேறு எத்தனை பேரிடம் தவறாக அறிக்கையை கொடுத்து மருத்துவம் என்ற பெயரில் அனு மருத்துவமனை கொள்ளையில் ஈடுபட்டதோ நினைத்துப் பார்க்கும்போதே மிகப்பெரிய அச்சமாக இருக்கிறது துச்சமாக நினைத்து மனித உயிர்களோடு விளையாடி உளவியலாக அச்சப்படுத்தி பணம் பறிக்கும் மருத்துவர்களையும், மருத்துவமனையின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
மருத்துவம் என்பது பிறப்புரிமை அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை ! சரி செய்யுமா அரசு பொறுத்திருந்து பார்ப்போம்.