மாநாடு 5 September 2022
நாளை 6-9-2022 செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் பல ஊர்களில் மின்சாரம் இருக்காது என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதன்படி அய்யம்பேட்டை நகரம் முழுவதும் மற்றும் கணபதி அக்ரஹாரம், வழுத்தூர், மாத்தூர், இளங்கார் குடி, பசுபதி கோயில், நெடார், ராமாபுரம், வயலூர், வீரசிங்கம்பேட்டை, அகர மாங்குடி, வடக்கு மாங்குடி, தேவன் குடி, ஈச்சங்குடி, மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்று பாபநாசம் பொறுப்பு உதவி பொறியாளர் வெங்கட்ராமன் தெரிவித்திருக்கிறார்.
கும்பகோணம் பகுதிகளில் மருதாநல்லூர், திப்பிராஜபுரம் ,மாடாக்குடி, நாகரசபுரம் , மங்கம்மாள் புரம், பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மாதாந்திர பராமரிப்புக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருக்காட்டுப்பள்ளி, பழமார்நேரி, நேமம், அகரப்பேட்டை, செய்யாமங்கலம், பாதிரக்குடி, மாரநேரி, இளங்காடு ,கச்சமங்கலம், கல்லணை, தோகூர், கோயிலடி , திருசென்னம் பூண்டி, பூண்டி, சுக்காம்பார் , நாகாச்சி, விஷ்ணம் பேட்டை, பவணமங்கலம், கூத்தூர், வானராங்குடி, பொதக்கிரி ,மகாராஜபுரம், சாத்தக்குடி, வளப்பக்குடி, வடுக குடி ,மைக்கேல் பட்டி, கண்டமங்கலம், செந்தலை, மனத்திடல், நடுக்காவேரி, வெள்ளம் பெரம்பூர், வரகூர், கருப்பூர், கடம்பங்குடி , ஐம்பது மேல் நகரம், உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது என்று திருவையாறு உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்திருக்கிறார்.
பட்டுக்கோட்டை பகுதிகளில் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டிருக்கும் கீழப்பாளையம், செம்பிரான் தோட்டம், எம்.என்.தோட்டம், லெட்சத்தோப்பு, மேலத்தெரு, நியூ ஹவுசிங் யூனிட், அதம்பை, அத்திக்கோட்டை, வீரகுறிச்சி, சூரபள்ளம், உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பட்டுக்கோட்டை புறநகர் உதவி செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்திருக்கிறார்.