வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் திருக்கோயில்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சக்தி வாய்ந்த அம்மன் கோயிலாகும்.
தஞ்சாவூர்-திருவையாறு சாலையில் கண்டியூருக்குக் கிழக்கே கும்பகோணம் சாலையில் 1 கிமீ தொலைவில் உள்ளது.இங்கு சாதி மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் வருகின்றனர். தன் தாயிடம் கோரிக்கை வைத்தால் எப்படி அன்போடு நிறைவேற்றுவாரோ அதை போலவே இந்த அம்மன் எங்களை காக்கும் தெய்வமாக கருணையே வடிவமாக இருக்கிறாள் எங்கள் வீரசிங்கம் பேட்டை மாரியம்மன் என்று பாசத்தோடு கூறுகிறார்கள் பக்தர்கள். அம்மனை தரிசனம் செய்ய எல்லைகள் கடந்து வாழ்பவர்களும் வருகிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் அருகிலேயே திங்களூர் சந்திரன் கோயில், திருகண்டியூர் சிவன் கோயில், சுவாமிமலை முருகன் கோயில் என்று இப்படி என்னற்ற புண்ணிய தளங்கள் இந்த கோயிலை சுற்றி அமைந்திருக்கிறது. வீரசிங்கம் பேட்டை மாரியம்மன் கோயிலுக்கு வருபவர்கள் நல்ல கிராமபுற சூழலையும் அம்மனின் அருளாசியும் உறுதியாக உணர்வார்கள் பக்தர்களுக்கு உதவும் வகையில் கீழே இருப்பிட வழிகாட்டும் வரைப்படம் இனைத்து இருக்கிறோம் நீங்களும் இதை படித்து மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவிடுங்கள்.
சரி ஊர் பெயர் காரணம் எதுவும் உள்ளதா என கேட்ட போது வீர சோழன் என்னும் மன்னனால் ஆளப்பட்டது வீரணன்சோலை என்ற இடமே நாளடைவில் வீரசிங்கம்பேட்டை ஆகியுள்ளது எனவும் கூறுகிறார்கள்.
இந்த அம்மனை இளமாரியம்மன் என்றும் அழைக்கிறார்கள் இப்பெயருக்கான காரணம் எதுவும் இருக்கிறதா என நாம் கேட்ட போது ஏழு பேர் சகோதரிகளாக வாழ்ந்து வந்தவர்களில் கடைசியில் ஏழாவதாக வாழ்ந்தவர் தானாம் இங்குள்ள அம்மன் ஆகையால் தான் இவரை இளமாரியம்மன் என்றழைக்கின்றனர் என்றார்கள். பங்குனி மாதத்திலும், ஆவணி மாதத்திலும் இக்கோயிலில் விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
இதுப்போல இன்னும் நிறைய கோயில்கள், ஜீவ சமாதிகள் , போன்றவற்றை தெரிந்துக்கொள்ள உங்களுக்கு தெரிந்ததை உலகுக்கு சொல்ல maanaadu.in எப்போதும் இணைந்திருங்கள்.
location ; https://goo.gl/maps/nFXdexvciWZmCuhx5