மாநாடு 6 September 2022
இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அதன்படி தஞ்சாவூரில் இன்று காலை 10 மணி அளவில் பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் ஐந்து மாத கர்ப்பிணி பெண் பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்து, கர்ப்பத்தை கலைத்து, அவரது குடும்பத்தினர் 14 பேரைக் கொன்ற ஆர் எஸ் எஸ், சங்பரிவார் கும்பல்களை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரையும் குஜராத் அரசு நன்னடத்தை விதியின் கீழ் கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது. சமூகத்தின் கொடூர வன்கொடுமையாளர்கள் தற்போது சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். பாஜக ஆட்சியில் கடந்த 8 வருட காலத்தில் காஷ்மீர் சிறுமி ஆசிபா வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதிலிருந்து பாசிச பாஜக கட்சியை விமர்சனம் செய்த பத்திரிக்கையாளர் கௌரிலங்கேஸ்வர் வரை பாஜக ஆட்சியில் கொலைசெய்யப் பட்டுள்ளனர்.சமூக விரோதிகள் இந்து மதம் என்ற ஆயுதத்தை கையில் வைத்துக் கொண்டு பல்வேறு சமூக கொடுமைகளை செய்து வருகின்றனர். இவர்களை பாஜக அரசு கண்டிக்கவில்லை, நெறிப்படுத்தவில்லை. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள், கருத்துக்கள் திணிப்பு என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்திய விடுதலைக்காக ஒரு சிறு துரும்பை கூட எடுத்துப் போடாத, போராட்டத்தில் ஈடுபடாத ஆர்எஸ்எஸ், பாஜக கும்பல்கள் சுதந்திர இந்தியாவிற்காக எண்ணற்ற முஸ்லிம்களின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை மறைக்கும் வேலையை செய்கிறது. இதன் ஒரு பகுதியாக குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கிலே 14 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து,அனைத்து குற்றவாளிகளையும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட வேண்டும், இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது .
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ம.விஜயலட்சுமி தலைமை வகித்தார். நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி துவக்கி வைத்து பேசினார்,மாவட்ட தலைவர் எஸ்.தனசீலி, துணைச் செயலாளர் எஸ்தர் ஜெயலீமா, மாவட்ட பொருளாளர் இரா.ஸ்ரீதேவி,தஞ்சை மாநகரச் செயலாளர் ஆர்.பத்மாவதி, தலைவர் எஸ். ராஜலட்சுமி, தஞ்சை ஒன்றிய செயலாளர் எஸ்.மல்லிகா, ஒரத்தநாடு எஸ். எலிசபத், பட்டுக்கோட்டை நகரம் ஜி.ஜானகி, ஒன்றியம் எஸ்.சகுந்தலா, பேராவூரணி கலைச்செல்வி, மதுக்கூர் ஜெனிதா, திருவோணம் ஜி.தவமணி, சேதுபாவாசத்திரம் கனகம், ஏ ஐ டி யூ சி மாவட்ட தலைவர் வெ.சேவையா, துணை செயலாளர் துரை. மதிவாணன் உள்ளிட்டவர்கள் கண்டண உரையாற்றினார்கள்.