மாநாடு 8 September 2022
கடந்த ஜூலை 17ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் இந்திய அளவில் 17, 78 லட்சம் மாணவர்கள் பரீட்சை எழுதியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கடலூர் ,காஞ்சிபுரம், கரூர், நாகர்கோயில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர் ,திருவள்ளூர் ,திருச்சி, திருநெல்வேலி, வேலூர் உட்பட பல்வேறு இடங்களில் 18 நகரங்களில் 200க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.
தமிழ்நாட்டில் 1,32,167 மாணவர்கள் நீட் தேர்வை எழுதினார்கள். தேர்வு முடிவுகள் நேற்று இரவு 11-15 மணிக்கு வெளியானது, அதில் 67,787 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தார்கள் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது.
இந்திய அளவில் முதல் 50 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 மாணவர்கள் மட்டுமே இடம் பிடித்திருக்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த திரு தேவ் விநாயகா என்கிற மாணவர் 705 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் 30 வது இடத்தையும், எம் ஹரிணி என்கிற மாணவி 702 மதிப்பெண்கள் பெற்று 43 வது இடத்தையும் பெற்றிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் தமிழ்நாட்டில் 6 விழுக்காடு குறைந்திருக்கிறது, கடந்தாண்டு தேர்ச்சி விகிதம் 57.43 விழுக்காடு இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 51.28 விழுக்காடு என குறைந்திருக்கிறது. இந்த ஆண்டு நீட் தேர்வை தமிழ் வழியில் 31,965 மாணவர்கள் எழுதியுள்ளார்கள்.
இந்நிலையில் சென்னை திருமுல்லைவாயில் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஸ்வேதா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நீட் தேர்வு எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்திருக்கிறார் அதன் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆன்லைனில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இவரின் தாயார் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று இரவு நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது, அதில் மாணவி ஸ்வேதா தோல்வியுற்றதாக தெரிகிறது அதன் காரணமாக மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. எப்போதும் தன் தாயோடு அறையில் உறங்குவாராம் ஸ்வேதா ஆனால் நேற்று இரவு ஏசி அதிகமாக இருக்கிறது நான் வராண்டாவில் படுத்து கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார், காலை ஸ்வேதாவின் தாயார் எழுந்து பார்த்தபோது பேரதிர்ச்சி காத்திருந்திருக்கிறது, ஸ்வேதா தூக்கில் தொங்கி இறந்திருக்கிறார். இதனால் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது
தற்கொலை எண்ணங்களை தடுக்க மாநில அரசின் சார்பாக 104 என்ற உதவி மைய எண் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதும் தேர்தல் பரப்புரையின் போதும் நீட் தேர்வை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறுத்தி விடுவோம் என்று பலமுறை கூறியிருக்கிறது. மேலும் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையின் போது நீட் தேர்வை ரத்து செய்யும் சூட்சம ரகசியம் எங்களிடம் மட்டுமே இருக்கிறது எங்களை ஆட்சியில் அமர்த்தங்கள் நாங்கள் நீட்டை தடுப்போம் என்றார்கள் ஆனால் இன்று வரை திமுக நீட்டை தடுக்கவில்லை இதனால் நீட் தேர்வாள் தமிழகத்தில் மாணவர்கள் இறப்பும் குறையவில்லை.
பொய்யுரைத்த திமுக வருந்த வேண்டும் போற்றக்கூடிய உயிர்கள் காக்க வேண்டும் என்கிறார்கள் வாக்களித்த வாக்காள பெருமக்கள் அடுத்த தேர்தலின் வாக்குக்காகவாவது வாக்குறுதியை காப்பாற்ற திமுக முயல வேண்டும்.