மாநாடு 5 October 2022
இருண்ட காலம் என்று படித்தது போக திமுக ஆட்சி அமைத்ததிலிருந்து தஞ்சாவூர் மக்கள் பார்த்து வருகிறார்கள். தஞ்சாவூர் மாநகருக்கு உள்ளும் நடைபெறுகின்ற ஒவ்வொரு அவலங்களையும் அவ்வப்போது சுட்டிக்காட்டி செய்திகள் வெளியிட்டு வருகிறோம் ,அதன் நோக்கமே மீண்டும் அந்த தவறுகள் நடைபெறாதவாறு சம்பந்தப்பட்டவர்கள் நடக்க வேண்டும் என்பதே ஆனால் பெரும்பாலும் தவறுகள் களையப்பட்டது மாதிரி காட்டப்படுகிறது . உண்மையில் பல அவலங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
தஞ்சாவூரில் மாநகரிலையே பல பகுதிகளிலும் மாலை நேரங்களிலேயே சாலையில் உள்ள மின்விளக்குகள் எரிய விடப்படாமல் இருட்டாகவே இருப்பதாக தொடர்ந்து கூறப்பட்டது, அதன்படி சில நாட்களுக்கு முன்பாக தொடர்ந்து பல நாட்கள் எறிய விடப்படாமல் இருந்த தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியில் உள்ள மின்விளக்குகளை படம் பிடித்து செய்தி வெளியிட்டு இருந்தோம், அதன் மறுநாள் சரி செய்யப்பட்டு மின்விளக்குகள் எரிந்ததாக அந்தப் பகுதியில் உள்ளவர்கள் கூறினார்கள் ,ஆனால் நேற்று இரவு அதே மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியவில்லை என்று நமது மாநாடு இதழுக்கு அழைப்பு வந்தது.
இது ஒரு புறம் இருக்க இன்று இரவு 9 மணி வாக்கில் தெற்கு வீதி,
கீழ ராஜவீதி, அரண்மனை பகுதிகள்
வடக்கு வீதி
பகுதிகளில் மின்விளக்கு எரியாமல் இருட்டாக இருப்பதால் சாலைகளில் நடமாடவும், பயணிக்கவும் முடியவில்லை என்று தகவல் வந்தது ,அதனைத் தொடர்ந்து நாம் அந்த பகுதிகளுக்கு சென்று பார்த்தோம் இந்த வீதிகளில் மின்சாரம் இல்லாமல் மின்விளக்குகள் எரியவிடப்படாமல் இருந்தது மக்கள் அவதியுற்றார்கள் அப்போது அந்த வழியே நடந்து சென்று ஒரு பெரியவரிடம் நாம் பேச்சு கொடுத்தோம் பல பகுதிகளும் இருட்டாகவே இருக்கிறது, திமுக விடியல் ஆட்சி தருவோம் என்று சொன்னார்கள். நம்பி ஓட்டு போட்டோம் இப்ப இருட்டிலேயே கிடக்கிறோம் , கஜா புயல் வந்தப்ப கூட இப்படி கரண்ட் நிப்பாட்டல ஆனா இவங்க ஆட்சிக்கு வந்ததிலிருந்து இப்படித்தான் நடக்குது, எப்ப தான் இதெல்லாம் சரி செய்வார்கள் என்று தெரியவில்லை என்று பொலம்பியப்படியே கடந்து சென்றார்.
ஏற்கனவே கீழ ராஜவீதி பகுதி சாக்கடை நாற்றத்தோடு இருக்கிறது அதை செய்தியாக வெளியிட்டு இருந்தோம், அதன் பிறகு தஞ்சாவூர் மாநகர மேயர் அந்த பகுதிக்குச் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியதாகவும் ,சரி செய்யப்படும் என்று அவரது சமூக வலைத்தளத்தில் படம் பிடித்துப் போட்டிருந்தார்
,ஆனாலும் இன்னும் சாலையில் சாக்கடை கழிவுநீர் ஓடி கொண்டே தான் இருக்கிறது ,அதோடு மின்விளக்குகளும் எரியாமல் இருட்டாக இருந்தால் எப்படி இருக்கும் என்று சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்த்து உரிய நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் .அடிக்கடி மின்வெட்டு நடைபெறுவதையும், மின்விளக்குகள் எரியாமல் இருப்பதையும் சரி செய்ய வேண்டும்.
புடிச்சு ஜெயில் ல போடுங்க சார். இவனுங்கல..