மாநாடு 14 October 2022
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் இருக்கும் கிரி சமுத்திரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் செட்டியப்பனூரில் அக்ஷயம் பைனான்ஸ் என்கிற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கி இருக்கிறார்.
இவரது நிதி நிறுவனத்தில் 2652 ரூபாய் கட்டினால் 40 ஆயிரம் ரூபாய் கடன் கொடுப்பதாக விளம்பரம் செய்திருக்கிறார், இதனைத் தொடர்ந்து மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் 703 பேர் இந்நிறுவனத்தில் 2652 ரூபாய் செலுத்தியதாக கூறப்படுகிறது.
நிதி நிறுவனம் ஆரம்பித்த 1 மாதத்தில் 20 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டிருக்கிறது, கடந்த மாதம் 28ஆம் தேதி விக்னேஷ் தலை மறைவு ஆகி உள்ளார், இதனை அறிந்த ஏமாறப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றார்கள். அதனடிப்படையில் 12 நாட்களாக தலைமறைவாக இருந்த விக்னேஷ் மாவட்ட குற்றப்பிரிவு காவலர்களால் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தகவல் அறிந்த பணம் கட்டி ஏமாறிய பெண்கள் பணத்தை மீட்டு தரக் கோரி வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.