மாநாடு 18 October 2022
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் நேற்று 17-10-2022 மாலை நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.கொள்கை விளக்க பொதுக் கூட்டத்தை திருவையாறு சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் கல்வியாளர் ஹுமாயூன், மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் பெருந்தமிழர் கிருஷ்ணகுமார், வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செந்தில்நாதன், வழக்கறிஞர் பாசறையின் மாநில தலைவர் வே.முத்துமாரியம்மன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் மு.கந்தசாமி, மாநிலக் கொள்கை பரப்பு செயலாளர் கரிகாலன், மகளிர் பாசறை பொறுப்பாளர் எழிலரசி, மற்றும் ஏராளமான பொறுப்பாளர்கள் நாம் தமிழர் கட்சியினர் இந்நிகழ்வில் உரையாற்றி நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை கூடியிருந்த பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தார்கள். பூதலூர் மக்களும் இவர்களின் பேச்சை ஆர்வமாக செவி கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்,
பூதலூர் என்பது விவசாயிகள் நிறைந்து வாழ்கின்ற பகுதி. இந்த பகுதியில் உள்ள விவசாய பிரச்சனைக்காக ,விவசாயிகளுக்காக உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் இதுவரை என்ன செய்திருக்கிறார், ஒரு முறையாவது விவசாயிகளுக்காக போராடி சிறை சென்று இருக்கிறாரா ஆனால் நாம் தமிழர் கட்சியினர் நாங்கள் காவிரியின் உரிமையை மீட்டு காப்பதற்காக தஞ்சாவூர் காவிரி திருமண மண்டபத்தின் எதிரே உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தை இழுத்து பூட்டி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம், அந்தப் போராட்டம் இந்தியாவின் தலைநகரான டெல்லி வரையில் அதிர்வலைகளை உண்டு பண்ணியது
அதன் காரணமாக நாம் தமிழர் கட்சியினர் 51 பேர் மீது கடுமையான வழக்குகள் பதியப்பட்டது, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டோம் அந்த வழக்கினை 3 ஆண்டுகள் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு நடத்தி அந்த வழக்கிலிருந்து வெளிவந்தோம், இதுபோல ஒரே ஒரு நிகழ்வையாவது திருவையாறு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் துரை.சந்திரசேகர் செய்ததுண்டா விவசாயிகளுக்காக அவர் செய்த நல்ல காரியம் என்ன என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள், ஆற்று மணலை அதிகமாக அள்ளிவிட்டால் என்ன விளைவுகள் நடைபெறும் என்பதை அருகில் இருக்கின்ற மாவட்டங்களில் பாருங்கள் பனைமரம் தனக்குத் தேவை உள்ள அளவு ஈர்க்கும் வகையில் வேர்ப்பரப்பி இருக்கும் அப்படி இருந்தும் அதற்கும் கீழாக மணல் அள்ளப்பட்டதன் காரணமாக பனை மரமே செத்து விழுகின்றது இதே நிலை நாளை நமது தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் வரும் ,ஏனெனில் திமுக, அதிமுக என்று பங்கு போட்டு மணல் அள்ளியதன் காரணமாக நமது ஆற்றிலும் மணல்கள் இல்லாத நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது இதையெல்லாம் தடுப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் என்ன செய்திருக்கிறார் என்று வாக்களித்த பொதுமக்கள் சிந்தித்துப் பாருங்கள் ஆற்றில் சிமெண்ட் போடுகிறது இந்த திராவிட மாடல் ஆட்சி ஆற்று மணலில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக குஞ்சு பொரிப்பதற்கு முட்டைகள் இடும் அந்த முட்டை பாதுகாப்பாக இருந்து மீன் குஞ்சுகள் பொறிக்கும், ஆனால் இவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஆற்றில் சிமெண்ட் போடுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலத்தடி நீர்மட்டம் வற்றிவிடும் இதையெல்லாம் எதிர்த்து கேட்கும் வேலையை எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டும் நீங்களே சொல்லுங்கள் யாராவது செய்கிறார்களா ஆனால் திமுகவாக இருந்தாலும் அதிமுகவாக இருந்தாலும் அவர்கள் செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டி மக்களை காப்பதற்காக இருக்கின்ற கட்சி தான் நாம் தமிழர் கட்சி. நாம் நம் நிலம் பாலைவனம் ஆவதற்கு முன்பாக விழித்துக் கொள்ள வேண்டும் எனவே நீங்கள் நாம் தமிழர் கட்சியை ஆதரித்து வலுப்படுத்த வேண்டும் இது உங்களின் கடமை நீங்கள் வருகின்ற தேர்தலில் உறுதியாக செய்வீர்கள் என்று நம்புகிறோம் என்றார் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் கந்தசாமி.
அடுத்ததாக பேசிய நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் நான் இந்த தொகுதியில் வேட்பாளராக உங்களிடத்தில் வாக்குகள் கேட்டு வந்திருக்கின்றேன்,
அப்போது நீங்கள் 5 முறை திமுகவில் சட்டமன்ற உறுப்பினராக துரை சந்திரசேகர் வென்றிருக்கிறார் இப்போது வென்றால் ஆறாவது முறை உறுதியாக அமைச்சராகிவிடுவார் என்றீர்களே திமுகவின் உறவுகளே, இப்போது அமைச்சராகி விட்டாரா சட்டமன்ற உறுப்பினராகி 5 முறை திருவையாருக்கு உருப்படியாக விவசாயிகள் மேம்பாட்டிற்காக என்ன செய்திருக்கிறார் நீங்களே சிந்தித்துப் பாருங்கள், நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகள் நாங்கள் உங்களிடத்தில் உரிமையோடு வந்து வாக்குகள் கேட்பது நாங்கள் வாழ்வதற்காக அல்ல நாங்கள் பிறந்த தமிழினம் நீங்கள் வீழ்ந்து விடக்கூடாது என்பதற்காக உங்களிடம் ஓடோடி வந்தோம் ஆனால் எங்களை சென்ற முறை கைவிட்டு விட்டீர்கள் இப்போது கூறுகிறீர்கள் அடுத்த முறை உறுதியாக நாம் தமிழர் கட்சியை வெல்ல வைப்போம் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் உறவுகளாகிய நீங்கள் நாம் தமிழர் கட்சியை ஆதரித்து நிற்க வேண்டிய காலத்தின் கட்டாயததை திமுக உருவாக்கும். அதிமுக திமுக செய்யும் தவறுகளை தட்டிக் கேட்காமல் அதை வேடிக்கை பார்க்கும் கடந்த 15 மாதங்களாக அதுதான் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, எதிர்க்கட்சிகள் அமைதி காத்து திமுகவிற்கு ஒத்துப் போவதை மக்கள் இப்போது புரிந்து கொண்டு விட்டீர்கள். நாமெல்லாம் வேறு வேறு கட்சியில் இருந்து பார்த்து விட்டோம், எதுவுமே சரியில்லை என்ற பிறகு நமக்காக நாமே உருவாக்கி இருக்கிற நாம் தமிழர் கட்சியை ஆதரித்து வலுப்படுத்துவதை தவிர நமக்கு வேறு வழி இல்லை எனவே எங்களை ஆதரித்து வலுப்படுத்துங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்ததொரு வழியமைத்து கொடுக்கிறோம் என்றார். மேலும் பூதலூர் அருகில் விளை நிலங்களை அழித்து வீட்டு மனைகள் போடப்பட்டு இருக்கின்ற நிறுவனத்திற்கு நம்மாழ்வார் ரியல் எஸ்டேட் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள் உங்களுக்கு அன்பான வேண்டுகோளை நாங்கள் வைக்கின்றோம் ,விளைநிலங்களை அழிக்கக்கூடாது விளைநிலங்களை அழித்தால் உணவு பஞ்சம் வரும். உழவு இல்லையேல் ,உணவு இல்லை என்ற சத்தியத்தை தனது இறுதி மூச்சு வரை மக்களுக்கு எடுத்துக் கூறி நல்வழிப்படுத்தியவர் ஐயா.நம்மாழ்வார் அவரை பெருமை படுத்தவில்லை என்றாலும் பரவாயில்லை , சிறுமைப்படுத்தி விடாதீர்கள் ஏனெனில் விளைநிலங்களை அழித்து வீட்டு மனைகள் போட்டு விற்கும் நிறுவனத்திற்கு நம்மாழ்வார் என்ற பெயரையாவது தயவு செய்து மாற்றுங்கள் என்றார்.
அதன் பிறகு பேசிய வழக்கறிஞர் மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில் நாம் தமிழர் கட்சியினர் இடத்தில் கொள்கை இருக்கிறது அதை விளக்குவதற்காக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்துகிறோம்.
இதைப் போல கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்துவதற்கு திமுகவிற்கு என்ன கொள்கை இருக்கிறது பேச்சு ஒன்றும் செயலொன்றுமாக இருப்பது தானே திமுகவின் வழக்கம் எனது தம்பி கந்தசாமி பேசியபோது ஐந்து முறை வெற்றி பெற்ற திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் சிறை சென்று இருக்கிறாரா திமுகவினர் சிறை சென்று இருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினார் நாம் தமிழர் கட்சியினர் சிறை சென்று இருக்கிறோம் விவசாயிகளை பாதுகாக்க விவசாயத்தை மீட்டெடுத்து நமது உரிமை காப்பதற்காக சிறை சென்று இருக்கிறோம். திமுகவினரும் திகார் சிறை வரை சென்று இருக்கிறார்கள் அவர்களின் பணத்தை காப்பதற்காக என்று பேசிய போது கூடி இருந்த பெருவாரியான மக்கள் கரஓசை எழுப்பினார்கள், நமது உரிமையை காத்து மீட்டு எடுப்பதற்காக எங்களது உயிருள்ளவரை கத்தி போராடுவோம், நமது மக்களுக்கு அரணாக நிற்போம் எங்களை இழந்து விடாதீர்கள், மண் மீதும் மக்கள் மீதும் அக்கறையுள்ள பிள்ளைகளை இன்னொரு முறை இந்த மண்ணிற்கு கிடைக்க மாட்டார்கள் எங்கள் உறவுகளாகிய நீங்கள் எங்களை ஆதரித்து நில்லுங்கள் என்றார் மேலும் எங்களுக்கு வாக்கு செலுத்தினால் பிஜேபி உள்ளே வந்துவிடும் என்று சில முட்டாள்கள் கூறுகிறார்கள், அதை நமது உறவுகளும் சிலர் நம்பி விடுகிறீர்கள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலில் விநாயகர் ஊர்வத்திற்கு அனுமதி கொடுத்தவரே அன்றைய திமுகவின் முதல்வராக மு. கருணாநிதி தான் தமிழ்நாட்டில் அதுவரை விநாயகர் ஊர்வலம் நடத்தப்படவில்லை இதை தெரிந்து, தெளிய வேண்டும். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் வாக்குகளை நாம் தமிழர் கட்சி பிரிக்கும் என்கிறார்கள் .தமிழரின் வாக்குகளை பிரிப்பதற்காக வந்ததல்ல நாம் தமிழர் கட்சி தமிழர்களை இணைத்து காப்பதற்காக வந்ததே நாம் தமிழர் கட்சி . அதிமுகவும், திமுகவும் எதிராளி என்பார்கள் எங்கே இப்போது திமுக தான் ஆட்சியில் இருக்கிறது அதிமுக சாராய ஆலையிலிருந்து திமுக சாராயம் வாங்கவில்லை என்று கூற முடியுமா. இந்த கட்சிகளை எல்லாம் நம்பி ஏமாந்த மக்கள் உங்களுக்காக உழைக்க காத்துக் கொண்டிருக்கின்ற எங்களை நாம் தமிழர் பிள்ளைகளை ஆதரித்து நில்லுங்கள் இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் உண்மையாக இருந்து உழைப்போம் என்றார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் புலவர் கிருஷ்ணகுமார் பேசியதாவது:
மொழியை காப்பதற்காக வந்தோம், தமிழ் மொழியை காப்போம் என்று சொன்ன திமுக செய்தது என்ன பள்ளி குழந்தைகளுக்கு பால பருவத்திலேயே அறத்தை நிலை நிறுத்துவதற்காக எடுத்துரைக்கப்பட்ட அறம் செய்ய விரும்பு, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், போன்ற தமிழ் இலக்கியங்களை தமிழர்களிடத்திலிருந்து தட்டிப் பறித்தது இந்த திமுக. இன்று பள்ளி குழந்தைகளுக்கு ஆத்திச்சூடி எல்லாம் சொல்லிக் கொடுப்பது இல்லை, அறிவை வலிமைப்படுத்தவும், அறிவை தெளிவுபடுத்தவும், உடலை ஊக்கப்படுத்தவும், இருந்த கல்வி முறையை திராவிட கட்சிகளான திமுக தடுத்து நிறுத்தி வணிக மயமாக்கியதை தவிர கல்வியில் என்ன முன்னேற்றத்தை கொண்டு வந்திருக்கிறது என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும், ஒரு கட்சி பிறந்ததை எதற்காக பிறந்தது என்று கூடி நிற்கின்ற அறிவில் சிறந்த பெருமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் .திமுக பிறந்தது பொண்டாட்டி சண்டையில் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது திராவிட கழகம் உருவானதும் இதே பிரச்சினையில் தான் இப்படி அதற்குப் பிறகு வந்த திராவிட கட்சிகள் ஒவ்வொன்றும் தன் சொந்த பிரச்சனைக்காக கட்சிகள் உருவாக்கப்பட்டது என்பது வரலாறு. ஆனால் நாம் தமிழர் கட்சி என்பது அப்படி உருவானதல்ல தமிழர்களை தமிழ் இனத்தை இவர்களெல்லாம் காப்பார்கள் என்று நம்பி இருந்த காலகட்டத்தில் நம் தொப்புள் கொடி உறவுகள் ஒன்றரை லட்சம் பேர் செத்து விழுந்த போது காக்காமல் கடற்கரையில் உலக அதிசய உண்ணாவிரத நாடகத்தை நடத்திக் காட்டிய போது தான் நாங்கள் உணர்ந்தோம் நமக்கானவர்கள் இவர்கள் இல்லை எனவே நமக்கு நாமே அரணாக இருந்து நம் உறவுகளை காக்க வேண்டிய கால கட்டாயத்தில் இருக்கின்றோம் என்பதை உணர்ந்து உறவுகளின் ரத்தத்திலும் ,அலறல் சத்ததிலும் உதயமானது தான் நாம் தமிழர் கட்சி. இதனை வலிமைப்படுத்த வேண்டியது மண்ணின் மீதும் மக்கள் மீதும் அக்கறையுள்ள ஒவ்வொருவரின் தார்மீக கடமை என்பதை உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது புரிந்து எங்கள் பின்னால் அணிவகுக்க தொடங்கி விட்டார்கள். முன்பெல்லாம் திருவையாற்றில் உள்ள காவிரி நதி என்பது புனித நதி, இங்கு வந்து நீராடி விட்டு சென்றாள் புண்ணியம் கிடைக்கும் என்று நம்பப்பட்டது .காவிரியில் எப்போதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது ஆனால் காவிரி கரையில் இப்போது எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் செய்த பெரும் சாதனையால் எந்நேரமும் டாஸ்மாக் சாராய தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது, திமுகவின் தற்போதைய பொதுச்செயலாளராக இருக்கும் கனிமொழி சென்ற ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 1.5 லட்சம் இளம் விதவைகள் இருக்கிறார்கள் என்று பேசினார் ஆனால் இப்போதெல்லாம் ஒன்றை ஆண்டில் எத்தனை விதவைகள் கூடியிருக்கிறார்கள் என்பதை பேசி தனது சகோதரரும் தமிழகத்தின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இடத்தில் சொல்லி எத்தனை கடைகளை மூடி இருக்கிறார் அல்லது முயற்சி செய்து இருக்கிறார் என்று இங்கு இருக்கின்ற பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எந்த ஒரு நடவடிக்கையும் அவர்கள் செய்யவில்லை எனும்போது அவர்களுக்கு மக்கள் மீது மக்களின் வாழ்க்கை மீது எந்தவித அக்கறையும் இல்லை என்பதை உணருங்கள், சாதிய மோதல்களும் ,சாதிய சண்டைகளும் திராவிடர்கள் இந்த மண்ணிற்கு வந்த பிறகுதான் உண்டாகியது என்கிறது வரலாறு, அதை மெய்ப்பிக்கும் வகையில் 1980 க்கு பிறகு தான் தமிழகத்தில் சாதிய கட்சிகள் தொடங்கியது என்பதை அறிவில் சிறந்த பொதுமக்கள் நினைவில் நிறுத்துங்கள். சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் இப்போதுதான் கூவத்தூரில் பணம் கொடுத்து அதிமுகவில் முதலமைச்சர் பதவிக்கு வந்திருக்கிறார்கள் என்று ஆனால் இதற்கு விதையிட்டவரும் கருணாநிதி தான் என்பதை அறிய வேண்டும். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அண்ணாதுரை மறைவிற்குப் பிறகு திமுகவின் தலைவராக யார் வரவேண்டும் என்கின்ற போட்டி நடைபெறுகிறது அந்த போட்டியில் விலை கொடுத்து தலைவர் பதவியை வாங்கியவர் தான் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி. இதை எடுத்துரைக்கும் விதமாக அப்போது திமுகவின் தலைவராக வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட மதியழகன் என்னிடம் சில லட்சம் இருந்திருந்தால் நான் திமுகவின் தலைவராகி இருப்பேன் என்று கூறினார். முன்பெல்லாம் பொய்யை மெய் போல பேசி தமிழர்களை ஏமாற்றி வந்தது திமுக ஆனால் இப்போதெல்லாம் எதைக் கொடுத்தும் விலைக்கு வாங்க முடியாத நாம் தமிழர் கட்சியை பார்த்து கலங்கி வருகிறது திமுக. ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு எதற்காக திமுக அனுமதி கொடுத்தது, நீங்கள் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்தை நடத்திக் கொள்ளுங்கள் நாங்கள் கடற்கரையில் 81 கோடி ரூபாய்க்கு பேனா வைத்துக் கொள்கிறோம் என்ற ஒப்பந்தத்தின்படி தானே ஊர்வலத்திற்கு அனுமதி அளித்திருக்கிறது தற்போதைய திமுக அரசு இவற்றையெல்லாம் மக்களாகிய நீங்கள் மனதில் நிறுத்தி எங்களுக்கு வலிமை சேர்த்து எங்களோடு நில்லுங்கள் நாங்கள் என்றென்றும் உங்களோடு நிற்கிறோம் என்றார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் பேசியதாவது: திராவிடம் என்பது தமிழர்களை தமிழர்கள் அல்லாதவர்கள் ஆள்வதற்கு உண்டாக்கப்பட்ட சொல்லே திராவிடம் ஒன்றரை லட்சம் தொப்புள் கொடி உறவுகளை இழந்த பின்பு தான் தமிழர்கள் வாழ்வதற்காக உருவாக்கப்பட்டது அல்ல திராவிடமும், திராவிட கட்சிகளும் என்பதை உணர்ந்த பிறகு தான் நாங்கள் நாம் தமிழர் என்று வீறு கொண்டு எழத்தொடங்கினோம்.
நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்பட்டு 12 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து இருக்கிறது, சாதியாக பிரித்து வைத்து திமுக தமிழ் தலைமைகளை ஒரு சீட்டுக்கும் இரண்டு சீட்டுக்கும் கையேந்த வைத்து விட்டது ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஒருவர் மட்டும்தான் இதுவரை அரசியல் வரலாற்றில் சாதியை பார்த்து வாக்களித்தால் அந்த ஓட்டு எனக்கு தீட்டு சாதி பார்த்து வாக்களிப்பவர்கள் வாக்கு எனக்கு தேவையில்லை என்று பேசிய ஒரே ஒருவர் தமிழக அரசியல் வரலாற்றில் சீமான் மட்டும் தான் என்பதை மக்கள் நினைவில் நிறுத்துங்கள். பாராண்ட தமிழ் மன்னன் இராசராசனின் சமாதி கேட்பாரற்று வீதியில் கிடக்கிறது, ஆனால் திராவிட தலைவர்களின் சமாதி தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மெரினா கடற்கரையில் இருக்கிறது. எப்போதுமே தமிழர்களை சாதியால் பிரித்து திராவிடர்கள் தங்களை ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் தலைவர்கள் போல காட்டிக் கொள்வதில் வல்லவர்கள், அதன் காரணமாக தான் மக்களுக்காக பல கிராமங்களை சாதி மத வேறுபாடு இன்றி அனைவருக்கும் கொடுத்த தலைவர் பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை, பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து வழக்கறிஞர் பட்டம் பெற்று தமிழர்களின் மானம் காக்க கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனாரை, எண்ணற்ற தமிழ் பெருமக்களின் சிலைகளைக் கூட சுதந்திரமாக வைக்காமல் அவர்களின் சிலைக்கு கூண்டு அமைத்து வைத்திருக்கிறார்கள் திராவிட கட்சியினர். ஆனால் தமிழர் பூமியில் திராவிட கட்சி திராவிட இயக்கங்களின் தலைவர்களின் சிலைகள் எவ்வளவு சுதந்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். சிலையாக இருந்தாலும் கூட நம்மை சாதியால் அடைக்கும் சரி செயலை திராவிடர்கள் செய்து கொண்டே இருக்கிறார்கள், ஆற்றுமமணலை 3 அடிக்கு மேல் எடுக்கக் கூடாது என்கிறது உச்ச நீதிமன்றம் ஆனால் ஆற்று மணல் குவாரிகள் எத்தனை வைத்திருக்கிறார்கள் , ஆற்று மணலை அள்ளி விற்பதற்கு திமுக, அதிமுகவை சேர்ந்தவர்கள் எத்தனை லாரிகளை வைத்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது அல்ல தினம்தோறும் திருவையாறை சுற்றியுள்ள மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள் ஒரு தவறை செய்பவனை விட அந்த தவறை பார்ப்பவனே குற்றவாளி இன்னும் எத்தனை நாட்கள் நாம் குற்றவாளியாக இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும். நமது அடுத்த தலைமுறை தண்ணீருக்கு என்ன செய்யும், பணம் ஒரு அளவுக்கு மேல் இருந்தால் அது காகிதம் 100 கார்கள் இருந்தாலும் ஒரு கார்களில் தான் பயணம் செய்ய முடியும், 10 வீடுகள் வாங்கினாலும், 1 வீட்டில் தான் வாழ முடியும், இனிமேலாவது திருந்துங்கள் நமது அடுத்த தலைமுறைக்கு நம் முன்னோர்கள் வாழ்ந்தது போல இந்த பூமியை வளம் மிக்கதாக காத்து கொடுக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மக்களை ஏமாற்றி பிழைக்கும் திராவிட கட்சிகளின் முகமூடிகளை கிழித்து ,புதியதோர் தேசத்தை தமிழர் நிலத்தில் படைப்பதே நாம் தமிழரின் தலையாய கடமையாக கொண்டு களமாடி வருகிறோம், எங்களுக்கு ஆக்கமாகவும், ஊக்கமாகவும் இருந்து நாம் தமிழர் கட்சியில் நாம் இணையவில்லை நாமெல்லாம் சேர்ந்து நாம் தமிழர் கட்சியை உருவாக்குகிறோம் என்கின்ற உண்மையை உணர்ந்து எங்களோடு வாருங்கள் உறவுகளே என்றார். அனைவரும் பேசி முடிக்கும் வரை பொதுமக்கள் அனைவரும் காத்திருந்து இவர்களின் பேச்சுக்களை கேட்டு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மக்களின் ஆதரவை பார்க்கும் போது மாபெரும் மாற்றத்தை வரும் தேர்தல்களில் மக்கள் கொடுப்பார்கள். நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று அறிய முடிகிறது.