Spread the love

மாநாடு 17 November 2022

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால் பந்தாட்ட விளையாட்டு வீராங்கனை 17 வயதுடைய பிரியாவிற்கு வலது காலில் வலி ஏற்பட்டதன் காரணமாக கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று இருக்கிறார். அங்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக வலியால் துடித்திதிருக்கிறார், அதனைத் தொடர்ந்து சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருக்கிறார்,

அப்போதுதான் கொளத்தூர் மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியமாக சிகிச்சை மேற்கொண்டதும் , அதனால் கால் அழுகி இருப்பதும் காலை துண்டித்து எடுக்க வில்லை எனில் உயிருக்கு ஆபத்து என்று கூறப்பட்டிருக்கிறது, அதன் பிறகு காலும் அகற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி மரணம் அடைந்தார்.

இந்த செய்தி காட்டுத்தீ போல அனைத்து பகுதிகளுக்கும் பரவியது, பெற்றோர்களும் ,உறவினர்களும் கதறி அழுத காட்சி தமிழகத்தையே துன்பத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் அரசு மருத்துவத்துறையின் நிர்வாக சீர்கெட்டினாலும் அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டாதால் மரணம் அடைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் வீட்டிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து பிரியாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார், அதன் பிறகு பிரியாவின் குடும்பத்திற்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் காண காசோலையையும், பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலைக்கான உத்தரவையும், பிரியாவின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் வீட்டிற்க்கான அரசு ஆணையையும் கொடுத்தார்.

இத்துயர சம்பவத்திற்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் , தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் 2 பேரையும், செவிலியர் 1 வரையும் பணியிடை மாற்றம் செய்திருப்பதாகவும், துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், காவல்துறை மூலம் இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுவரையில் அரசு சார்பில் பிரியாவின் குடும்பத்திற்கு செய்யப்பட்டு வருவதை வரவேற்கிறோம் , அதே வேலையில் இனி ஒரு உயிர் அரசின் நிர்வாக கவனக்குறைவால் போய் விடாதவாறு திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு , மருத்துவமனைகளில் நடக்கும் தவறுகளை களைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

56410cookie-checkதமிழக அரசு நாடு முழுவதிலும் இதை செய்ய வேண்டும் எதிர்பார்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!