மாநாடு 18 November 2022
தஞ்சாவூர் நகராட்சி என்கிற தரத்திலிருந்து உயர்த்தப்பட்டு மாநகராட்சி என்று அறிவித்ததில் இருந்து தஞ்சாவூரில் உள்ள உண்மையிலேயே மக்கள் மீது பற்று கொண்ட சமூக ஆர்வலர்கள் கோபப்படும்படி நாள்தோறும் எதாவது ஒரு நிகழ்வு நடந்தேறிக் கொண்டே தான் இருக்கிறது. அதிலும் தஞ்சாவூரை ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் அறிவித்து பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விதம் சொரணை உள்ள யாரையுமே கோபப்பட தான் வைக்கும் என்பது எதார்த்தம்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற பிறகு தஞ்சாவூருக்கு திமுக சார்பில் நியமிக்கப்பட்ட மேயர் சண்.ராமநாதன் தான் ஒரு மாநகரத் தந்தை என்பதை மறந்து மேயர் உடையுடன் பொதுமக்கள் கூடியிருந்த பொது இடத்தில் உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்ததும், மேயர் நேர பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படத்திற்கு செல்வதையும் அதை பொது வெழியில் போட்டதும் அப்போதே பல்வேறு ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்து பலரையும் முகம் சுளிக்க வைத்தது,
அதன் பிறகு சிறிது காலம் இது போன்ற வேலைகளில் ஈடுபடாமல் இருந்தார் என்பதா அல்லது அடுத்து உதயநிதி படம் வரவில்லை என்று புரிந்து கொள்வதா? என்று நினைக்கத் தோன்றுகிறது இன்று.
முன்பு எப்படி மேயர் வேலை நேர பட்டியலில் உதயநிதி படம் பார்ப்பதை பொதுவெளியில் வெளியிட்டாரோ அதேபோல இன்றும்
உதயநிதி நடித்த கலகத் தலைவன் படத்தை துவக்கி வைப்பதற்காக செல்கிறேன் என்றும், அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்க செல்வதாகவும் பதிவிட்டு இருந்தார்,
அதன்படி இன்று காலை தஞ்சாவூர் அண்ணா சிலையில் இருந்து பேரணியாக கிளம்பி வந்து ஜீவி காம்ப்ளக்ஸ் என்கின்ற சாந்தி கமலா திரையரங்கில் படம் பார்த்தார். சிலர் கேட்கலாம் ஏன் இதில் என்ன இருக்கிறது என்று ,
அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது ஏற்கனவே தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி ஸ்கீமில் பணிகள் மிகவும் தொய்வாக நடந்து கொண்டிருப்பதால் நான்கு வீதிகளிலும் சாக்கடை தண்ணீர் தேங்கி நின்று கொசுக்கள் உருவாகிறது அதன் மூலம் மக்களுக்கு நோய் தொற்றும் அபாயம் இருக்கிறது,
அது மட்டுமில்லாமல் பழைய பேருந்து நிலையம் அருகில் அரண்மனை செல்லும் சாலையில் கழிவு நீர் வாய்க்கால் சரி செய்யும் பணி என்று சொல்லி பல நாட்களாக சாக்கடையில் உள்ள நீரை எந்திரத்தின் மூலம் சாலையில் அள்ளி கொட்டும் வேலையை செய்து வருகிறார்கள், சாக்கடை நீர் சாலைகளிலேயே ஓடுகிறது அதனை கடந்து பல குழந்தைகள், பொதுமக்கள் பயணிக்கின்றார்கள்.
இதுபோன்ற இடங்களுக்கு வந்து மக்களுக்காக களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டிய மாநகர தந்தை என்கிற மகத்தான பொறுப்பில் இருக்கும் மேயர் சண்.ராமநாதன் ரசிகர் மன்றத்தினரோடு சேர்ந்து
உதயநிதியின் திரைப்படத்தை பார்ப்பதில் நேரத்தை கழிப்பது, அவ்வளவு முறையானதாக கருத முடியவில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்,
அது மட்டுமன்றி இவர் திரைப்படம் பார்க்க வந்த திரையரங்கத்தின் அருகிலேயே தான் இருக்கிறது, ஏழை எளிய மக்கள் வசித்து வந்த வீடுகளை காலி செய்து விட்டு மாநகராட்சியால் இடிக்கப்பட்டு பள்ளமாக ஆக்கப்பட்டு இருக்கின்ற இடம்,
அந்த இடத்தில் தண்ணீர் நிறைய தேங்கி நிற்கிறது அதில் கொசுக்கள் உற்பத்தியாவது தெரிகிறது அதையெல்லாம் பார்த்து அந்த நீரை அங்கிருந்து எடுத்து நோய் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாத்து இருந்தால் ,
படம் பார்ப்பதை பற்றி யாரும் எதுவும் நினைத்திருக்க முடியாது, மாநகராட்சியால் நடைபெற வேண்டிய பணிகள் நடக்கிறதா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிற விதமாக அவ்வளவு மெதுவாக நடக்கிறது பணிகள் , அடுத்த மழையும் தொடங்க இருப்பதாக செய்திகள் வரும் நிலையில் அதனையும் கவனத்தில் கொண்டு மக்கள் பணியாற்றினால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இனியாவது துரிதமாக மாநகர தந்தை பணியாற்றுவாரா? ரசிகர் மன்ற தலைவர் போல மன்ற பணி ஆற்றுவாரா? சண்.ராமநாதன் அடுத்த உதயநிதி நடித்த படம் வரும் வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.
உதயநிதி காலில் விழுந்ததால் மாநகர செயலாளர் பதவி கிடைத்தத்து. மக்கள் பணி செய்தாலோ, மக்களின் காலில் விழுந்தாலோ ஏதும் ஆதாயம் கிடைக்குமா என்ன. மக்கள் கொசு கடித்து செத்தால் என்ன, சாக்கடை கால்வாயில் விழுந்து செத்தால் என்ன. இந்த மாநகரமும் இவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்த மக்களும் நாசமகா போனாலும் இவர்களுக்கென்ன. நமக்கு மக்களை விட உதயநிதி படம்தான் முக்கியம்.