மாநாடு 22 November 2022
கடந்த 9ஆம் தேதி தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அருகில் உள்ள பேங்க் ஸ்டாப் காலனியில் வீட்டில் பின்பக்க கதவை உடைத்து நகை, பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர் திருடி சென்றிருக்கின்றார், திருட்டு குறித்து தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.
தமிழ் பல்கலைக்கழக காவலர்கள் தனிப்படை அமைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளியை தேடி வந்தார்கள், மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்திருக்கிறார்கள், கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் ஒரு நபர் குப்பை பொறுக்குவது போல அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படி நடமாடி வந்தது தெரியவந்திருக்கிறது, அதனைத் தொடர்ந்து செய்த விசாரணையில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்து கொண்டிருந்த அந்த நபர் சின்ன சிவா என்கிற சிவா என்று தெரிய வந்திருக்கிறது , அவனை கைது செய்து விசாரித்ததில் அவன் மீது பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் , பகல் நேரங்களில் குப்பை பொறுக்குவது போல வீடுகளை நோட்டமிட்டு ,
ஆளில்லாத வீடுகளாக பார்த்து இரவு நேரங்களில் திருட்டில் ஈடுபட்டது இதுவரை நடைபெற்ற விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.