மாநாடு 25 November 2022
தமிழ்நாட்டில் வீடுகளுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் சில மாறுபாடுகளை செய்திருக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம். அதன்படி தாழ்வழுத்த மின் இணைப்பு வைத்திருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் மின் இணைப்பு எண்னுடன் ஆதாரையும் இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது,
அதனையொட்டி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வருவாய் பிரிவு தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் கே,மலர்விழி சுற்றறிக்கையை அனைத்து கண்காணிப்பு பொறியாளர்களுக்கும் அனுப்பி உள்ளார் அதில் குறிப்பிட்டு இருப்பதாவது : மின் இணைப்போடு ஆதாரையும் இணைத்த பிறகு அதனை சரிபார்த்த பின்னரே நுகர்வோர்கள் மின் கட்டணத்தை இணைய வழியிலோ, நேரடியாகவோ செலுத்தும் படி மாற்றி அமைக்கப்பட்டிருப்பதால், மின் கட்டணம் செலுத்துவதில் இரண்டு நாள் தளர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது ,அதாவது நுகர்வோர் 28ஆம் தேதி மின் கட்டணம் கட்ட வேண்டிய கடைசி தேதி என்றால் 30ஆம் தேதி கட்டலாம், என்றும் இந்த தளர்வுகள் நவம்பர் 24ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை உள்ள தாழ்வழுத்த பிரிவு மின் நுகர்வோர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அதே சமயம் ஆதார் எண்ணை இணைப்பதற்காகவே இந்த காலக்கெடு கொடுத்திருப்பதால் ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பவர்களுக்கு மட்டும் இது பொருந்தும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த தகவல்களை மின் கட்டண வசூல் மையங்கள் வாயிலாக நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
