மாநாடு 28 November 2022
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் தொடர்ந்து பலரின் மானமும் , உயிரும் பறிபோய் கொண்டே இருந்தது, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தது.
அதனையொட்டி கடந்த மாதம் 1ஆம் தேதி ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது, அவசர சட்டம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்ட மசோதா கடந்த மாதம் 19 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி வியாழக்கிழமை இந்த மசோதா குறித்து ஆளுநர் விளக்கம் கேட்டிருந்தார், அதில் மாநில அரசுக்கு தண்டனை விதிக்க அதிகாரம் உள்ளதா உட்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார், அதற்கு 24 மணி நேரத்தில் விளக்கம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது, ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டத்தின் காலக்கெடு நேற்றோடு முடிவடைந்துள்ளது,
ஆன்லைன் சூதாட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தி மக்களை காக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.