மாநாடு 28 November 2022
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி கிராமத்தில் IBEA என்கிற தனியார் பள்ளி இயங்கி வருகிறது இன்று காலை பள்ளி குழந்தைகளை ஏற்றுக் கொண்டு வந்த பள்ளி வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் 108க்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து வந்தவர்கள் ஆம்புலன்ஸில் விபத்துக்குள்ளான குழந்தைகளை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள் 8 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது என்றும், 2 குழந்தைகளை தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், தெரிகிறது.
இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் யாரும் குழந்தைகளை பார்ப்பதற்கு அரசு மருத்துவமனைக்கு வரவில்லை என்று பட்டுக்கோட்டையில் சாலை மறியலில் பெற்றோர்களும், உறவினர்களும் ஈடுபட்டார்கள் காவலர்கள் வந்து சமாதானம் பேசியதால் மறியல் கைவிடப்பட்டது.
இந்தப் பள்ளியின் வாகனம் எஃப்சிக்காக சென்று இருப்பதால், தனியார் வாகனத்தை பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்ததாகவும், அந்த வாகனம் தான் இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றி வரும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என்று தெரிய வருகிறது.