மாநாடு 07 December 2022
தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் வீடுகளுக்கு பெறுபவர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியிருந்தது, அதன் காலக்கெடு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,
அதனையொட்டி மின் கட்டணம் செலுத்தும் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது, ஒரே நேரத்தில் அதிகமான நுகர்வோர்கள் மின் இணைப்போடு ஆதார் இணைக்க வருவதால் சர்வர் தடை ஏற்பட்டு ஆதாரை இணைக்க முடியாமல் நுகர்வோர்கள் துன்பப்படுகிறார்கள் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆதாரை இணைப்பதற்காக வேறு ஒரு லிங்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த லிங்கை கீழே கொடுக்கிறோம் அதில் போய் உங்கள் ஆதார் எண்ணை நீங்களே மின் இணைப்போடு இணைத்துக் கொள்ளலாம்.
பலரும் தாங்கள் இருக்கும் வீட்டிற்கு தந்தையின் பெயரிலோ, தாயின் பெயரிலோ அல்லது மின் இணைப்பு யார் பெயரில் வாங்கினார்களோ அவர்கள் தற்போது இறந்துவிட்ட நிலையில் எப்படி ஆதாரை இணைப்பது என்று குழப்பம் அடைந்து இருக்கிறார்கள், இதனை தெளிவுபடுத்தும் விதமாக அமைச்சர் கூறும் போது மின் இணைப்பு வாங்கியவர்கள் தற்போது உயிரோடு இல்லை என்றாலும் அவர்களின் வாரிசுகள் இப்போது தங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைக்கலாம் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.
மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைக்கும் லிங்க் இதோ : :http://Bit.ly/linkyouraadhar