Spread the love

மாநாடு 12 December 2022

தமிழ்நாட்டில் கடந்த 5ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி 8ஆம் தேதி சென்னைக்கு தென்கிழக்கில் 350 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்ட மாண்டஸ் புயல், இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னைக்கும் புதுச்சேரிக்கு இடையே கரையை கடந்தது.

அதன் பிறகும் தமிழகத்தில் பரவலாக பல இடங்களிலும் மழை பெய்து வருகிறது, மாண்டஸ் புயல் உருவான இடத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது இது புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை செய்யக்கூடும் என்று தெரிவித்திருக்கிறது,

சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் தொடர்ந்து இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

58370cookie-checkதமிழகத்தில் அடுத்த புயல் வானிலை ஆய்வு மையம்
3 thoughts on “தமிழகத்தில் அடுத்த புயல் வானிலை ஆய்வு மையம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!