மாநாடு 12 December 2022
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் கோவிந்தநல்லூர் கிராமத்தில் வசித்து வரும் குருநாதன் மகன் சிவா என்ற விவசாயி திருக்கருகாவூரில் செயல்பட்டு வரும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் விவசாய பயிர் கடன் பெற்று அதற்கான பயிர் காப்பீட்டு தொகையை அதே வங்கியில் (11.02.2020) செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில் தமிழக அரசு விவசாயிகள் பயிர் கடனை தள்ளுபடி செய்தபோதும் இவரது பயிர் கடனை தள்ளுபடி செய்யாமலும் இவருக்கான பயிர் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாமலும், வங்கி நிர்வாக அலட்சிய போக்கால் தொடர்ந்து விவசாயி சிவாவை அலைக்கழித்து வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும்.
இது சம்பந்தமாக இன்று (12.12.2022)திங்கள் கிழமை வங்கியின் மேலாளரை நேரில் சந்தித்து சம்பந்தப்பட்ட விவசாயிக்கு உடனடியாக கடனை தள்ளுபடி செய்து பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறினால்,இந்த வங்கி கிளை நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மிகப்பெரிய அளவில் விவசாயிகளை திரட்டி முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடேசன், பாதிக்கப்பட்ட விவசாயி சிவா அவரது தந்தை குருநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
செய்தி -இராஜராஜன்.