மாநாடு 12 December 2022
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அமைச்சராக பதவியேற்கிறார்.
அதனையொட்டி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
உடன்பிறப்புகள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள், மூத்த நிர்வாகிகள் கொஞ்சம் வருத்தமாகதான் உள்ளார்கள். திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வரும் டிசம்பர் 14ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகிறார்.
அதற்கான ஏற்பாடுகள் தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று அவருக்கு தனி அறை தயார் செய்து உள்ளனர். திமுக உடன்பிறப்புகள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் .. சில உடன் பிறப்புகள் உதயநிதி ஸ்டாலின் முதல்வராகும் தகுதியும் உள்ளது என்று சந்தோஷமாக கூறி வருகின்றனர்.
செய்தி -இராஜராஜன்