Spread the love

மாநாடு 13 December 2022

கொலை வழக்கில் தொடர்புடைய
இருவர் குண்டர் சட்டத்தில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் முனியூர் சடையங்கால் ஊரைச் சேர்ந்த முருகையன் என்பவரின் மகன்
செல்வகுமார்(37வயது)மற்றும்
புதுச்சேரி மாநிலம்பிச்சை வீரன் பேட்டைரெட்டியார் பாளையம்
சரவணன் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ்குமார்(வயது 34)இருவரும்
ஏற்கனவே கொலை வழக்கில்
திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர், மேலும் தற்போது
தஞ்சை அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் இருவரையும் கைது செய்து
மாவட்ட கண்காணிப்பாளர் ரவளிபிரியா அவர்களின் பரிந்துரையின் கீழ்

அம்மாபேட்டை காவல் நிலைய
கண்காணிப்பாளர் கரிகால் சோழன்
அனைத்து குற்ற ஆவணங்களின்
அடிப்படையிலும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிடப்பட்டது அதன் அடிப்படையில் கைது செய்யபட்டு
திருச்சி மத்திய சிறையில்
அடைக்கப்பட்டனர்.

செய்தி – மணிகண்டன்

58630cookie-check2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது திருச்சி மத்திய சிறையில் அடைப்பு
One thought on “2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது திருச்சி மத்திய சிறையில் அடைப்பு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!