மாநாடு 18 December 2022
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி.
காந்திய, காமராஜர் மக்கள் இயக்கம் சார்பில் கையெழுத்து பிரச்சார பயணம் தொடங்கியது.
தஞ்சாவூர் 18:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு காந்திய காமராஜர் மக்கள் இயக்கத்தின் சார்பில் மாநில செயலாளர் தங்க தமிழழகன் தலைமையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி கையெழுத்து பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அதுசமயம் புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் உள்ள பயணிகள், பழக்கடை வியாபாரிகள், பெட்டிக்கடை மற்றும் டீக்கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் இடம் கையெழுத்து பெற்றனர். தொடர்ந்து கையெழுத்து பிரச்சார பயண வாகனம் பாபநாசத்தில் இருந்து, பல்வேறு மாவட்டங்களுக்கு புறப்பட்டு சென்றது.
செய்தி -ராஜராஜன்
