மாநாடு 19 December 2022
நேற்று மாலை 6 மணி அளவில் குடந்தை ரத்ததான டிரஸ்ட் சார்பாக சமூக விழிப்புணர்வு மற்றும் ரத்த தானம் செய்தவர்களுக்கான விருது வழங்கும் விழா கும்பகோணத்தில் உள்ள தென்றல் திருமண மஹாலில் நடைபெற்றது.
இவ்விழாவில் அறங்காவலர் க.ராஜ்குமார் தலைமை தாங்கினார், கும்பகோணம் மாநகர துணை மேயர் சு.ப.தமிழழகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருவடிக்குடில் சுவாமிகள் கலந்து கொண்டார்.
நிகழ்வில் பேசிய பலரும் ரத்த தானத்தின் அவசியத்தையும் , ரத்த தானம் செய்வதால் உள்ள நன்மைகளையும், சுட்டிக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்கள்.
சிறப்பு அழைப்பாளராக பங்கு பெற்ற திருவடிக்குடில் சுவாமிகள் பேசும் போது ஒவ்வொரு ஆண்டும் சிறந்து விளங்கும் சமூக ஆர்வலர்களுக்கு, பொதுப்பணி செய்பவர்களுக்கு, சமூக அக்கறையோடு சிறந்து விளங்குபவர்களுக்கு அரசின் சார்பில் விருதுகள் வழங்கி அவர்களை சிறப்புப்படுத்துவதோடு , அவர்களைப் போல பலரும் ஈடுபாடு கொள்ள செய்யும் வகையில் ஆண்டுதோறும் அரசு விருதுகள் வழங்கியும் , பலவித சலுகைகள் வழங்கியும் வருகிறது, அதேபோல தொடர்ந்து பலமுறை இரத்ததானம் செய்யும் கொடையாளர்களுக்கும், அரசின் சார்பில் விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று பேசினார்.
இக்கருத்தினை முழுமையாக அரசிடம் கொண்டு சென்று விரைவில் இதற்கான ஏற்பாட்டினை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார் குடந்தை மாநகர துணை மேயர் ச.ப.தமிழழகன் இந்நிகழ்வில் ஆர்வமாக பொதுமக்களும், குருதி கொடையாளர்களும் ,சமூக ஆர்வலர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.