மாநாடு 20 December 2022
நெல்லை மாவட்டம் சி.என் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் இவர் தனது நண்பர்கள் மூணு பேரோடு தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் குளிப்பதற்காக ஆடி காரில் சென்று இருக்கிறார்.
பழைய குற்றாலத்தில் குளித்துவிட்டு வீடு திரும்பும் போது இவர்களின் வாகனத்தை அதிவேகமாக இயக்கியிருக்கிறார்கள் அதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆடி கார் சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது, ஆடி காரின் இஞ்சின் கழண்டு கீழே விழுந்துள்ளது காரில் பயணித்த சங்கர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார், அவரின் நண்பர்கள் 3 பேரும் படுக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்,
இச்சம்பவம் தொடர்பாக குற்றாலம் காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
594440cookie-checkஆடி கார் விபத்து அந்த இடத்திலேயே மரணம்