Spread the love

மாநாடு 06 January 2023

மாநகராட்சியில் வேலை என்றாலே அது ஏமாற்று வேலை தான் பணம் பறிபோக தான் செய்யும் என்பதை தஞ்சாவூர் மாநகராட்சியில் தனக்கான வேலைக்காக செல்லும் பொதுமக்கள் நாள்தோறும் அனுபவித்து புலம்பி வருவதை நம்மில் பலரும் பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோமல்லவா .

தஞ்சாவூர் மாநகராட்சியில் வேலையில் இருப்பவர்கள் பலர் பணம் பிடுங்கிக் கொண்டு  தான் வேலை பார்க்கிறார்கள் , சிலர் பணம் பறித்துக் கொண்டாலும் வேலையை பார்க்காமல் இழுத்தடித்துக் கொண்டிருப்பதை போல சற்று மாறுதலாக திண்டுக்கல்லில் ஒரு நிகழ்வு நடந்தேறி இருக்கிறது. ஏமாற்றியவரை காவலர்கள் கைது செய்து இருக்கிறார்கள் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்: 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மல்வார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதுடைய விஜயகுமார். இவர் திண்டுக்கல்லில் ஊர்க்காவல் படையில் வேலை பார்த்திருக்கிறார், இவர் கடந்த 2019, 2020, 2021 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியில் அரசு வேலை வாங்கி தருவதாக சாணார்பட்டி சங்கப்பனியிடம் 1 லட்சம் ரூபாயும், ஆண்டவர் என்பவரிடம் 7 லட்சம் ரூபாயும், கவி ரத்னா என்பவரிடம் 6 லட்சம் ரூபாயும், சகாயராஜ் என்பவரிடம் 3 லட்சம் ரூபாயும் என மொத்தம் 17 லட்சம் ரூபாயை ஆசை வார்த்தை கூறி வாங்கிக் கொண்டு சென்ற ஆண்டு அந்த 4 பேருக்கும் சென்னை மாநகராட்சியில் பணியில் சேர்வதற்கான பணி ஆணையையும் வழங்கியிருக்கிறார், அந்த பணி ஆணையை உண்மை என்று நம்பி வாங்கி வேலைக்கு சென்றவர்களுக்கு அங்கு சென்றவுடன் தான் தெரிய வந்திருக்கிறது இது போலியான பணி ஆணை என்று, உண்மை தெரிந்தவுடன் பதற்றம் அடைந்த அந்த 4 பேரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரிடம் புகார் கொடுத்திருக்கின்றனர். அதனடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை தேடி வந்திருக்கின்றனர் இச்செய்தி தெரிய வந்தவுடன் விஜயகுமார் தலைமறைவு ஆகியிருக்கிறார். அவரை இன்று தாடிக்கொம்புக்கு அருகே கைது செய்து காவலர்கள் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள். 

61000cookie-checkமாநகராட்சியில் வேலை பணம் இழப்பு
One thought on “மாநகராட்சியில் வேலை பணம் இழப்பு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!