மாநாடு 07 January 2023
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது அதன்படி பொதுத் தேர்வானது மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி முடிவடைகிறது.
பொதுத் தேர்வை 8.80 லட்சம் மாணவ மாணவியர் எழுதுகின்றனர் அதனையொட்டி தேர்வு கட்டணம், தேர்வு நுழைவுச்சீட்டு எனப்படும் ஹால் டிக்கெட் வழங்குவது உள்ளிட்ட அறிவிப்புகளை அவ்வப்போது பள்ளி கல்வித்துறை வெளியிட்டு வருகிறது.
அதன்படி தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு மின்னஞ்சல் முகவரி எனப்படும் மெயில் ஐடி கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது, ஏனெனில் இனி மாணவர்களின் தகவல்கள் மின்னஞ்சல் மூலமே அனுப்பப்படும் என்றும் உயர்கல்வி சேர்க்கைக்கும், நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களுக்கும் மின்னஞ்சல் முகவரி தேவைப்படும் என்பதால் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் வருகிற 9ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதிக்குள் மெயில் ஐடியை உருவாக்கி தர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.