மாநாடு 07 January 2023
தஞ்சாவூர் அருகே உள்ள கண்டிதம்பட்டு பகுதியில் இருக்கும் ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியர் பாலு என்பவர் ரேஷன் கடைக்கு நேரத்திற்கு வருவதில்லை என்றும் ரேஷன் பொருட்களை சரியாக மக்களுக்கு தருவதில்லை என்றும் தெரிய வருகிறது.
இந்நிலையில் பொங்கல் திருநாள் இன்னும் சில நாட்களில் வர இருப்பதை முன்னிட்டு தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கொடுக்கப்பட்டு வருவதைப் போல, மக்களுக்கு இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்பு கொடுக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது . ஒரே நேரத்தில் மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக டோக்கன் கொடுக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள ரேஷன் கடைக்கு வந்த நபர் ரேஷன் கடை ஊழியர் பாலுவிடம் ஏன் நேரத்திற்கு நீங்கள் வருவதில்லை என்று தனது பேச்சை துவங்குகிறார், இதனால் ஆத்திரப்பட்ட ரேஷன் கடை ஊழியர் பாலு கோபத்தின் உச்சிக்கே சென்றிருக்கிறார். அந்நிலையில் பாலு கீழ்க்கண்டவாறு பேசியிருக்கிறார்:
பல இடங்களிலும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு கொடுப்பதற்கு 5% விழுக்காடு வசூல் செய்து வருகிறார்கள் அப்படி வசூல் செய்தால் வெகு நேரம் வேலை செய்யலாம் என்றும், வேண்டுமென்றால் என்னைப் பற்றி எந்த அதிகாரிகளிடம் வேண்டுமென்றாலும் நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள், அதிகாரி என்ன வந்து தலையை எடுத்து விடுவாரா? என்னிடம் வணங்கிப் பேசினால் நானும் வணங்கி பேசுவேன் , எதிர்த்தால் போடா என்று சொல்லி விடுவேன். என்னைப் பற்றி கேட்டுப் பாருங்கள் தமிழ்நாட்டிற்கே பாலு என்றால் தெரியும் யார்ட்ட வேண்டுமென்றால் சொல்லுங்கள் CM ஐ என்கிட்ட பேச சொல்லு அவனை என்று முதல்வரை ஒருமையில் பேசியவர் வேலை போனால் போகட்டும் . மிரட்டுவது எனக்கு பிடிக்காது என்று வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார்.
இந்த வீடியோவை பார்க்கும் போது ரேஷன் கடையில் வேலை பார்க்கும் பல அரசு ஊழியர்கள் அவர்களின் வீட்டு சொத்தை கொண்டு வந்து பொதுமக்களுக்கு தானமாக கொடுக்கும் மனநிலையில் இருப்பதை பிரதிபலிக்கிறது.
இதுபோல இருப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக நமது மாநாடு வளையொலியில் இந்த வீடியோவை வெளியிட்டோம், அது மட்டுமல்லாமல் இதனை பார்க்கும்போது, இதுவெல்லாம் ஒரு பிரச்சனையா என்று எண்ணத் தோன்றும், ஆனால் பலருக்கும் இதுதான் பிரச்சனை, உணவில் பிரச்சனை இருக்கின்ற காரணத்தினால் தான் ரேஷன் கடையே இருக்கிறது, இங்கு நடக்கும் முறைகேடுகளை கேட்பதற்கு, அவர்களுக்காக பேசுவதற்கு யாரும் இல்லை என்கின்ற குறையை தீர்ப்பதற்காக தான் மக்களோடு மக்களாக நமது நிருபர்களை நமது மாநாடு இதழ் ஊக்குவித்து பணி அமர்த்தி இருக்கிறது, மேலும் வருகிற காலங்களில் மிக விரைவில் பல்வேறு அலுவலகங்களில், பொதுமக்களுக்கு நடக்கும் அவலங்களையும் , தஞ்சாவூர் மாநகராட்சி போன்ற அலுவலகங்களில் மக்கள் படும் அல்லல்கள் ஒவ்வொன்றையும் ஆதாரத்தோடு காட்சிப்படுத்தி, ஆச்சு ஊடகத்தில் வெளியிடுவோம்.
வீடியோ இணைப்பு பார்க்க தொடவும்:https://youtu.be/Kjpr8XsOCIk
Your article helped me a lot, is there any more related content? Thanks! https://www.binance.com/join?ref=P9L9FQKY