மாநாடு 04 March 2023
தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 12 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானங்கள் ஏற்றப்பட்டது, அதில் முதன்மை கோரிக்கையாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் 1-7-2022 முதல் வழங்க வேண்டிய 4 விழுக்காடு அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்திற்கு மாநில செயலாளர் கா. முருககுமார் தலைமை வகித்தார், மாவட்ட பொருளாளர் எம். ஐயம்பெருமாள் வரவேற்புரை ஆற்றினார் மாநிலத் துணைத் தலைவர் வேழவேந்தன், இரா சுந்தரமூர்த்தி, எல்.ரமேஷ், வடிவேல், ஆர். செல்வராஜ், சக்கரவர்த்தி, மாவட்ட மகளிர் அணி தலைவி கலைச்செல்வி, செயலாளர் அழகுராணி, லிங்குசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கே.பால்பாண்டியன் சங்க ஆலோசகர், தமிழ் மாநில வருவாய் துறை சங்கத்தை சேர்ந்த தரும.கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள், மாவட்டச் செயலாளர் முரளி குமார் நன்றி உரையாற்றினார்.
இந்த அரசு அமைவதற்கு காரணமாக இருந்த அரசு ஊழியர்களின் கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றுமா இந்த அரசு பொறுத்திருந்து பார்ப்போம்.