Spread the love

மாநாடு 21 March 2023

சமீப காலமாக மோசடி செய்பவர்கள் பல நூதன வழிகளை கையாள்கிறார்கள். அப்படி ஒரு நிகழ்வு சென்னையில் நடந்துள்ளது. ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் மாதம் பத்தாயிரம் ரூபாய் தரப்படும் என்று கூறி 3000 பேரிடம் 161 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருக்கிறது.

சென்னை கோடம்பாக்கத்தில் 2019 ஆம் ஆண்டு முதல் ஆம்ரோ கிங்ஸ் லிமிடெட் என்கிற பெயரில் ஒரு நிறுவணம் தொடங்கப்பட்டு அதன் இயக்குனர்களாக ராஜராஜன் அவரது மனைவி முத்துலட்சுமி இருந்திருக்கிறார்கள், தங்கள் நிறுவனம் ரியல் எஸ்டேட், சூப்பர் மார்க்கெட், ஹோட்டல்கள், இன்சூரன்ஸ் நிறுவனம் ,தங்க வியாபாரம் உள்ளிட்ட 18 தொழில்களை செய்து வருவதாகவும் எங்கள் நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் பத்தாயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்று கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்யப்பட்டிருக்கிறது,

அதன்படி சில மாதங்கள் மட்டும் பணம் கொடுத்து விட்டு அதன் பிறகு தராமல் பணத்தை தராமல் ராஜசேகர் அவர் மனைவி முத்துலட்சுமியும் தலைமறைவாகி இருக்கிறார்கள்.

தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகார் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு மார்ச் 16ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,

அதன் பிறகு தீவிர விசாரணையில் இறங்கிய பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் மார்ச் 18 ஆம் தேதி மோசடி செய்தவர்களுக்கு சொந்தமான 5 இடங்களில், சோதனை செய்ததில் ஆவணங்கள் பணம் தங்கும் வெள்ளி நகை கார் எலக்ட்ரானிக் ஆவணங்கள் சிக்கியிருக்கிறது. அதனை பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

உரிமையாளர் ராஜராஜன் அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் ரஞ்சித் குமார் உள்ளிட்டவர்களை 19ஆம் தேதி இரவு கைது செய்து விசாரணை செய்ததில் பல உண்மைகளை கக்கி உள்ளனர் மோசடிக்காரர்கள், அதன் பிறகு மூணு பேரும் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையாகவும், விழிப்புணர்வோடும் இருந்தாலும் கூட சில சமயங்களில் இது போல ஏமாற்றுக்காரர்களிடம் ஏதாவது ஒரு விதத்தில் பலரும் சிக்க தான் செய்கிறார்கள், இவ்வாறு எவ்வகையிலாவது ஏமாற்றப்பட்டவர்கள் எதற்கும் தயங்காமல் காவல்துறையிடம் முறையிட்டால் துரிதமாக செயல்பட்டு அவர்களின் பொருளாதாரம் மீட்கப்பட்டு குற்றம் இழைத்த மோசடிக்காரர்களை சிறையில் அடைக்கும் சம்பவங்கள் நடைபெற்று தான் வருகிறது என்பதை உணர்ந்து ஏமாற்றப்பட்டவர்கள் காவல்துறையிடம் புகார் அளிக்க முன்வர வேண்டும். அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை இது போல நிகழ்வுகள் உணர்த்துகிறது. மேலும் தகவல்களுக்கு ஏப்ரல் மாதம் 1ம் தேதி வரவிருக்கும் அரசியல் மாநாடு இதழை படியுங்கள்.

67960cookie-check1 லட்சம் கொடுத்தால் மாதம் 10,000 தருவதாக மோசடி செய்தவர்கள் புழல் சிறையில் அடைப்பு, சொத்து பத்திரங்கள் பறிமுதல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!