ஆட்டை வெட்டுவதற்கு பதிலாக ஆட்டை பிடித்திருந்தவர் தலையை மாற்றி வெட்டியதால் *பரபரப்பு*
தினந்தோறும் ஏதாவது வினோத
சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது அப்படி தான் நேற்று ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே மது போதையில் ஒருவர் செய்த காரியத்தால் ஒரு குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஆடு வெட்டும்போது ஒருவர் பிடித்து கொள்வது வழக்கம்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி என்ற இடத்தில் உள்ள வலசப்பள்ளியில் சங்கராந்தி விழாவின் மூன்றாம் நாளாக ஆடு வெட்டி பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஆட்டை சுரேஷ் என்பவர் கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது ஆடுகளை வெட்டும் பணியில் சலபதி என்பவர் ஈடுபட்டிருந்தார். இவர் நன்றாக மது அருந்தி முழு போதையில் இருந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் ஆடு பலிகொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கடும் போதையில் இருந்த சலபதி என்பவர் ஆட்டை வெட்டுவதற்கு பதிலாக அதை பிடித்துக்கொண்டிருந்த சுரேஷ் தலையை ஆடு வெட்டும் அருவாவால் ஓங்கி வெட்டியதில் சுரேஷ் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் அங்கேயே பலியானார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மது போதையால் ஒரு குடும்பமே இன்று அநாதையாக ஆகியிருக்கிறது.