Spread the love

மாநாடு 02 ஏப்ரல் 2023

நாட்டில் உள்ளவர்கள் நிம்மதியாக உறங்குகிறோம் என்றால் நாட்டின் எல்லைப் பகுதியை காக்கும் பணியில் இருக்கும் ராணுவத்தினர் தங்களது உறக்கத்தை துறந்து நமக்காக சேவையாற்றுகிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

அதேபோல வீட்டில் உள்ளவர்கள் தங்களது பாதுகாப்பை உணர்ந்து நிம்மதியாக உறங்குகிறோம் என்றால் பாதுகாப்பு பணியில் தங்களது உறக்கத்தை துறந்து நமக்காக காவல் காக்கும் காவலர்களின் அளப்பரிய சேவை தான் காரணம்என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏன் இந்த செய்தியை இப்போது பதிவிடுகிறேன் என்றால் காவல்துறையினர் என்றாலே ஏதோ பொதுமக்களுக்கு கொடுமை செய்ய வேண்டும் என்று வரம் வாங்கி வந்தவர்கள் போல பார்க்கும் நிலை தற்போது அதிகரித்து வருகிறது.

பல மனிதநேயமிக்க காவல்துறை உறவுகள் இருக்கின்ற போதும் சிலர் மனநோயாளிகள் போல பொது மக்களிடம் நடந்து கொள்பவர்களும் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை. இருப்பினும் பெரும்பான்மை நல்லவர்களின் செயல் அத்துறையில் இருக்கும் சிலராலேயே மறைக்கவும் படுகிறது என்கின்ற உண்மை நிலை வருத்தத்துக்குரியதுதான். 

சில நாட்களுக்கு முன்பு நமது அரசியல் மாநாடு இதழின் செய்தியாளர் இரவு 10:50 மணியளவில் தனது பணியினை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது வாகன தணிக்கையில் இருக்கின்ற காவலர்கள் இவரின் வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை கேட்டு இருக்கிறார்கள். ஆவணங்களை காட்டிவிட்டு சிறிது நேரம் கழித்து எனக்கு தொடர்பு எடுத்து நடந்த தகவலை வருத்தத்தோடு தெரிவித்தார். அதாவது என்னை வெகு நேரம் நிற்க வைத்து விட்டார்கள் சார் என்று வருத்தப்பட்டார். 

நான் உடனே நீங்கள் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது உங்கள் வாகனத்தின் அனைத்து ஆவணங்களும் இருந்ததல்லவா அதனை எடுத்து அவர்களிடம் காட்டி விட்டீர்கள் அல்லவா காவலர்களும் உங்களை வீட்டிற்கு போக சொல்லி விட்டார்கள் அல்லவா பிறகு ஏன் நீங்கள் வருத்தப்பட வேண்டும். நீங்கள் சிறிது நேரம் நின்று ஆவணங்களை காட்டி விட்டு செல்வதற்கு இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களே? நீங்கள் உடனே வீட்டிற்கு செல்லாமல் ஓரமாக நின்று கவனித்து இருந்தால் தெரியும் அதற்குப் பிறகு எவ்வளவு நேரம் அந்த இடத்தில் கால் கடுக்க நின்று தங்களது பணிகளை செய்கிறார்கள் காவலர்கள் என்று. காவலர்கள் ஏதோ வேற்றுக்கிரகவாசிகள் போல பார்க்கும் மனப்போக்கை நாம் மாற்ற வேண்டும் தம்பி என்றேன்… பொறுமையாக கேட்டுக் கொண்டு இருந்தார். மேலும் தொடர்ந்தேன்

சில நாட்களுக்கு முன்பாக தஞ்சாவூரில் நடந்த கொலைகளுக்கு காவலர்களின் அலட்சியம் தான் காரணம் என்று பலராலும் பேசப்பட்டது அல்லவா? அப்போது காவலர்கள் தங்கள் பணிகளை செய்யாமல் அலட்சியமாக இருக்கிறார்கள் என்று பேசுவதும், அவர்கள் பணிகளை மேற்கொள்ளும் போது அனைத்தும் இருந்தும் சிறிது நேரம் ஆகிறது என்பதால் வருத்தப்படுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்று எடுத்துரைத்தேன்.

மேலும் நமது மாநாடு செய்தி குழுமத்தின் செய்தியாளர்கள் உண்மையைக் கொண்டு வர எவ்வளவு கடுமையாக உழைக்கிறீர்களோ. அதேபோல தங்களது கடமைகளை செய்யும் அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும் அதை மீறி எப்போதாவது நமது செய்தியாளர்கள் நடந்து கொண்டார்கள் என்று எனக்கு தெரிய வந்தால் விசாரணை செய்து நமது நிருபர்கள் மீது தவறு இருந்தால் உடனடியாக முதல் முறைக்கு மூன்று மாத காலம் பணியிடை நீக்கும் செய்யப்படுவீர்கள் , இதே நிலை மூன்று முறை நீடித்தால் அதன் பிறகு அறிவிப்பு கொடுத்து அவ்வாறு நடந்து கொண்டவர்களை மாநாடு செய்தி குழுமத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவீர்கள் என்கின்ற விதி இருக்கிறது என்பதனையும் நினைவில் வைத்து செயல்படுங்கள் என்று அன்பாக எடுத்துரைத்தேன் . இனி அதுபோல காவலர்கள் இரவு நேரங்களில் பணி செய்தால் அதனை புகைப்படம் எடுத்தோ, வீடியோ எடுத்தோ என்னிடம் தாருங்கள் அதனை வெளியிட்டு அப்பணியில் இருக்கும் காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்து செய்திகள் போடுவோம்.

அது அவர்களுக்கு ஒரு வித ஊக்கத்தைக் கொடுக்கும் இனி அதுபோல செய்யுங்கள் என்றேன். அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டு இனி சரியாக செயல்படுகிறேன் சார் என்று உறுதி அளித்தார் நமது நிருபர்.

நான் நேற்று இரவு 10:40 மணியளவில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியை கடந்து வந்து கொண்டிருந்தபோது அங்கு வாகன தணிக்கையில் இருந்த காவலர்களை கண்டேன் அவர்கள் தங்களது பணியை திறம்பட செய்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அனைவருக்கும் நமது மாநாடு இதழ் செய்தி குழுமம் பாராட்டுக்களை தெரிவித்து வாழ்த்தி மகிழ்கிறது.

68330cookie-checkதஞ்சாவூரில் காவலர்கள் வாகனச் சோதனை வேற்றுக்கிரகவாசிகளா இவர்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!