Spread the love

மாநாடு 13 ஜீன் 2023

தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவி கடந்த 6 மாதங்களாக காலியாக இருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக இருந்த ராஜகோபால் ஐஏஎஸ் தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தார். அவரின் பதவிக்காலம் கடந்த நவம்பர் மாதம் நிறைவுற்றதையடுத்து கடந்த ஆறு மாதங்களாக தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவி நிரப்பப்படாமல் காலியாகவே இருந்தது. அந்தப் பதவிக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்படலாம் என்று பலராலும் கருதப்பட்டு வந்த நிலையில் தற்போது சகில் அக்தர் தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல முன்னாள் ஏடிஜிபிக்களான தாமரைக்கண்ணன், பிரியா குமார், திருமலை முத்து, செல்வராஜ் ஆகியோரும் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

ஏற்கனவே பல மனுக்கள் சரியான விசாரணை நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதை இவர்களாவது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

உரிய நேரத்தில் உரிய விசாரணை  நடக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்.

70490cookie-checkதமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் 6 மாதங்களுக்குப் பிறகு நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!