மாநாடு 17 June 2023
மினி பஸ்கள் பெரும்பாலும் முறையாக பராமரிக்கப்பட்டு சீராக பயிற்சி பெற்றவர்களை கொண்டு ஒழுக்கமானவர்களை பணியமர்த்தி இயக்கப்படுவதில்லை என்பது ஊரறிந்த ரகசியம்.
அதிலும் தஞ்சாவூரில் இயக்கப்பட்டு வரும் விஎம்டி முருகையா என்கிற சிற்றுந்து ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒருமுறை விபத்துக்கள் ஏற்படுத்துகிறது. அதனை புகைப்பட ஆதாரங்களுடன் ஒவ்வொரு முறையும் மாநாடு மின்னிதழில் வெளியீட்டு சென்று சேர வேண்டியவர்களுக்கு கொண்டு சேரும் விதத்தில் சுட்டிக்காட்டி செய்திகளும் வெளியிட்டு வருகிறோம்.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி 2023 அன்று “அத்துமீறும் மினி பஸ்கள் அடக்குவார்களா அதிகாரிகள்” என்கிற தலைப்பில் செய்தியை வெளியிட்டோம் அப்போது தஞ்சாவூரில் இருந்து மருத்துவக் கல்லூரி சாலையில் சென்று கொண்டிருந்த முருகையா என்கிற சிற்றுந்து பிரேக் பிடிக்காமல் ஒரு காரில் மோதி விபத்து ஏற்படுத்தியது .
அப்போதே கடுமையான நடவடிக்கையை எடுத்திருந்தால் அடுத்த மூணாவது மாசம் அதாவது
இந்த பேருந்து மார்ச் மாதம் 31ஆம் தேதி 2023 அன்று மெடிக்கல் காலேஜ் சாலையில் உள்ள டிவிஎஸ் ஷோரூம் அருகில் 30க்கு மேற்பட்ட வாகனங்களையும் ஒரு மகிழுந்தையும் சேதப்படுத்தி அங்கு நின்றவர்கள் மீதும் மோதி பெரிய விபத்தை ஏற்படுத்தி இருக்காது. இந்த விபத்து அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை அன்று உருவாக்கியது
இருந்த போதும் பொறுப்பாக இருந்து இது போன்ற வாகனங்களை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுத்து விபத்தை தடுக்க வேண்டியவர்கள் எப்போதாவது சாலையில் வந்து நின்று கொண்டு விபத்தை தடுக்க முயற்சிகள் மேற்கொள்வதற்க்காக வாகனங்களில் செல்பவர்களிடம் சோதனை நடத்துவதாக சாதனையாளர்கள் போல ஊடகங்களில் பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருக்கும் காரணத்தால் தொடர்ந்து இதுபோன்ற விபத்துக்கள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் எனில் ஒவ்வொரு மூணு மாதத்திற்கு ஒரு முறையும் இதே பேருந்து விபத்தினை தஞ்சையில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
அதே பேருந்து இன்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையிலிருந்து வந்து கொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் கணபதி நகர் ஸ்டேடியம் எதிரில் நின்று கொண்டிருந்த மகிழுந்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிற்றுந்தை இயக்கிய ஓட்டுனர் அப்போது போதையில் இருந்தார் என்கிறார்கள் அங்கு இருந்தவர்கள்
உண்மையிலேயே என்ன நடந்தது ஏன் இந்த சிற்றுந்து அடிக்கடி விபத்து ஏற்படுத்துகிறது என்பதை கண்டு ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மிகப்பெரிய விபத்தை மறுபடியும் இந்த சிற்றுந்து ஏற்படுத்தும் அதற்கு முன்பாக தடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
தக்க நடவடிக்கைகள் எடுத்து விபத்துக்களை உண்மையிலேயே தடுப்பார்களா இதையெல்லாம் செய்யாமல் சாலையில் நின்று கொண்டு ஊடகங்களுக்கு பேட்டி மட்டும் கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.