மாநாடு 23 June 2023
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி என்பவர் பொறுப்பேற்று இன்னும் 3 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவலர்கள் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் சோதனையிட்டு வருகிறார்கள்.
கொரோனா காலகட்டத்தில் காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த மகேஸ்வரி கொரோனா காலகட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களில் ஊழல் செய்திருப்பதாகவும், காஞ்சிபுரத்தில் பணியில் இருந்த போது லஞ்சம் வாங்குவதில் கில்லாடியாக செயல்பட்டு இருப்பதும் தொடர்ந்து புகார்கள் போன நிலையில் திடீரென திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மாற்றலாகி இருக்கிறார் மகேஸ்வரி.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பதவி ஏற்ற சிறிது காலகட்டத்திலேயே டெண்டர் விடுவது போன்ற பல்வேறு விதங்களில் முறைகேடுகளில் மகேஸ்வரி ஈடுபட்டு இருப்பதாகவும் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்ததாகவும் தகவல்கள் பறந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் இந்த சோதனையை திண்டுக்கல் ஆர்.எம். காலணியில் வசித்து வரும் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரத்தில் பணிபுரிந்த துப்புரவு ஆய்வாளர்கள் 3 பேரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதும், தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் நகராட்சி ஆணையராக மகேஸ்வரி இருந்தபோது 2014ஆம் ஆண்டு பெரியகுளம் நகராட்சி சிறந்த மாநகராட்சி விருது பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைப் பற்றி கேட்கும் போது சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: விருது வாங்குவதெல்லாம் இப்போதுள்ள காலத்தில் பெரிய கடினமான காரியம் அல்ல உதாரணத்திற்கு பட்டுக்கோட்டை நகராட்சி எப்படி இருக்கிறது என்பது யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை அந்த நகராட்சி கூட சிறந்த நகராட்சியாக அறிவிக்கப்பட்டது என்பதும் அதேபோல தற்போது தஞ்சாவூர் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டிருப்பதையும் வைத்தே தெரிந்து கொள்ளலாம் என்றார்கள்.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திவரும் சோதனையால் திண்டுக்கல்லில் பரபரப்பு.
இதே போல தஞ்சாவூர் மாநகராட்சியிலும் அதிகாரிகள் முதல் துப்புரவு ஆய்வாளர்கள் யார் யார் வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் செல்ல வேண்டி இருக்கும் என்கிற முழுமையான செய்தி வர மாதம் வர இருக்கிற அரசியல் மாநாடு மாத இதழில் வெளியாகும் அரசியல் மாநாடு இதழ் தமிழ்நாடு முழுவதும் கடைகளில் கிடைக்கிறது வாங்கி படித்து மற்றவர்களுக்கும் பரிந்துரையுங்கள்.