மாநாடு 19 July 2023
தஞ்சாவூர் ராசாமிராசுத்தார் அரசு மருத்துவமனையில் 10 மாத குழந்தையை பறிக்கொடுத்துவிட்டு பெற்றோர்கள் பரிதவிப்பு ..
தஞ்சாவூர் மாவட்டம் மடிகை கிராமத்தை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் கீதா தம்பதி இவர்களுக்கு தரணிகா என்கின்ற பத்து மாத குழந்தை இருந்துள்ளது.
இன்று காலை துறையூர் அங்கன்வாடி மையத்திலிருந்து உங்களது குழந்தைக்கு பத்தாவது மாத தடுப்பூசி போட வேண்டும் அதற்காக குழந்தையை அங்கன்வாடி மையத்திற்கு கொண்டு வாருங்கள் என்று தொலைபேசி மூலம் பெற்றோர்களுக்கு அழைப்பு வந்திருக்கிறது அதனை தொடர்ந்து இன்று காலை குழந்தையின் தாய் கீதா தரணிகாவை தூக்கிக்கொண்டு துறையூர் அங்கன்வாடி மையத்திற்கு சென்று இருக்கிறார் அங்கு குழந்தைக்கு தடுப்பூசி போட்டு இருக்கிறார்கள் ஊசி போட்டவுடன் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்பட்டு குழந்தை சுயநினைவை இழந்திருக்கிறது உடனே அருகில் உள்ள காசா வளநாடு புதூர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு குழந்தையை கொண்டு சென்றிருக்கிறார்கள் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் மேலும் 4 ஊசி குழந்தைக்கு போடப்பட்டதாக தெரிய வருகிறது .
இந்த நிலையில் குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமானதாக கூறப்படுகிறது அதனை அடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவரின் காரிலேயே குழந்தையையும் பெற்றோரையும் தஞ்சாவூரில் உள்ள ராசா மிராசுத்தார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். தஞ்சாவூர் ராசாமிராசுத்தார் மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்களும் உறவினர்களும் குழந்தையின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இது சம்பந்தமாக அரசு மருத்துவமனை அலுவலர் மருத்துவர் செல்வத்திடம் கேட்டபோது குழந்தை தஞ்சாவூர் மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே இறந்திருந்தது இதை மட்டும் தான் இப்பொழுது எங்களால் சொல்ல முடியும் ஏன் குழந்தை இறந்தது எப்படி உயிர் போனது என்பது எல்லாம் குழந்தைக்கு உடற்கூறாய்வு நடைபெற்ற பிறகு தெரியவரும் அதனையும் குழந்தைகளுக்கு ஊசி போடுவதற்கு முன்பாக அங்கன்வாடி மையத்தில் எழுதப்பட்டுள்ள ரிப்போர்ட்டையும் வைத்தே முழுமையாக கூற முடியும் என்றார் .
பத்துமாத குழந்தையை பறி கொடுத்து பரிதவிக்கும் பெற்றோர்களுக்கு என்ன சொல்லி என்ன ஆகப் போகிறது