மாநாடு 05 August 2023
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பழனிமாணிக்கம் கலந்து கொண்டு மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் 11 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும், ஒரு அரசு உதவி பெறும் பள்ளிக்கும் என மொத்தம் 12 பள்ளிகளைச் சேர்ந்த 1474 மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 71 லட்சத்து 11 ஆயிரத்து 860 மதிப்புள்ள மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகள், தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்
செய்தியாளர் த.நீலகண்டன்
716810cookie-checkஅரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது