மாநாடு 13 September 2023
அன்று தஞ்சாவூர் நீர் மேலாண்மையை பார்த்து உலகமே வியந்து போற்றும் படி புகழ் பரப்பி வாழ்ந்ததெல்லாம் மன்னராட்சி காலத்தில்…
இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில்.. தஞ்சாவூரில் கட்டப்பட்ட மேம்பாலம் எனும் மரண பாலத்தையும், மண்ணோடு மண்ணாக இடித்து அழிக்கப்பட்ட ஆதன் மழைநீர் வடிகால் பாலத்தையும், ரோஸ்ட் மாதிரி போடப்பட்டிருந்த ராஜராஜன் நகர் மெல்லிய ரோட்டையும் இது போன்ற எண்ணற்ற தரமற்ற பணிகள் நடைபெற்ற பகுதிக்குச் சென்றால் தெரிய வருகிறது அப்பகுதி மக்கள் எந்த அளவுக்கு வெந்து நொந்து போய் இருக்கிறார்கள் என்பது.மேலே நாம் சுட்டிக் காட்டப்பட்ட மரண பாலம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் மேரிஸ் கார்னர் மேம்பாலம் கட்டப்பட்டது அதிமுக ஆட்சியில்… ஆனால் ஆதன் மழைநீர் வடிகால் பாலம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது தற்போதைய திமுக ஆட்சியில் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த கட்சியை சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் மக்களிடம் கெட்ட பெயர் வாங்க வேண்டும் நமக்கு வாக்களித்த மக்கள் வயிறு எரிய வேண்டும் என்று நினைக்க வாய்ப்பு இல்லை என்பது தானே எதார்த்தம் உண்மை நிலை அப்படி இருக்க ஊரறிய கட்சியால் மக்கள் பணி செய்வார்கள் இவர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டு அப்பகுதி மக்களால் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணிக்கு வந்திருக்கும் மாமன்ற உறுப்பினர்கள் திறனற்றவர்களாக இருப்பதால் தரமற்ற பணிகள் நடைபெறுகிறதா ? தரமற்ற பணிகளுக்கு காரணம் என்ன? என கண்டறிவதற்காக முதற்கட்டமாக தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 37 வது வார்டு பகுதியில் கள ஆய்வு செய்தபோது நாம் கண்ட காட்சிகளும் மக்கள் பேசிய பேச்சுகளும் …
தஞ்சாவூர் மாநகராட்சி 37 வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருப்பவர் திருமதி.ராஜா தமிழரசி இவர் கவுன்சிலராக இருக்கும் பகுதியில் மக்களுக்கு அவ்வப்போது இலவச மருத்துவ பரிசோதனைகள் செய்து வருகிறார் என்று மக்கள் கூறுகிறார்கள் இருந்த போதும் இவரின் ஆளுகையில் உள்ள நாஞ்சிக்கோட்டை பைபாஸ், விளார் சாலையை இணைக்கும் முனியாண்டவர் காலனி சாலை வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கிறார்கள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் அன்றாட பணிகளுக்கு செல்லும் பெண்களும், முதியோர்களும் பயன்படுத்தும் முக்கிய சாலை மிகவும் சுகாதாரமற்ற முறையில் காட்சியளிக்கிறது.
இந்த சாலை ஓரங்களிலும் , குடியிருப்பவர்களின் வீட்டு வாசலிலும் ரோட்டை ஆக்கிரமித்தும் பெரிய பெரிய குழாய்கள் கடந்த ஒரு ஆண்டாக அப்படியே கிடப்பதாகவும் இதை யாரும் இதுவரை அங்கிருந்து அப்புறப்படுத்தவில்லை என்றும் இதனால் விச பூச்சிகளும், பாம்புகளும் தங்கள் வீட்டுக்குள் வருவதாகவும் மக்கள் வாழ்வதற்கே தகுதியற்ற பகுதியாக உருமாறி வருவதாக வேதனையோடு கூறுகிறார்கள் தஞ்சாவூர் மாநகராட்சி 37 வது வார்டு மக்கள்.
இந்நிலையில் அந்தப் பகுதியில் பல இடங்களில் மாநகராட்சி குப்பை தொட்டிகளிலும் அதனை ஒட்டிய இடங்களிலும் குப்பைகள் அல்ல படாமல் அப்படியே நோய் பரப்பும் நிலையில் இருந்ததையும் பார்க்க முடிந்தது . அது மட்டுமல்லாமல் உலகமே பார்த்து வியந்து வெட்கப்படும் விதமாக ஒழுங்கற்ற முறையில் மழை நீர் வடிகால் வாய்க்கால் பணிகள் நடைபெற்று இருப்பதையும் காண முடிந்தது. இதே போல சுகாதாரமற்ற நிலையில் அந்த பகுதி தொடர்ந்து இருக்குமானால் பக்கத்தில் இருக்கும் சுடுகாட்டிற்கு சுலபமாக மக்கள் செல்வார்கள் என்பதை சொல்லாமல் சொல்லியது அங்கு நாம் கண்ட காட்சிகள்.
சென்னையில் டெங்கு காய்ச்சலால் மாணவர் மரணம் அடைந்ததையும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டதையும் கருத்தில் கொண்டு இப்பகுதி மாமன்ற உறுப்பினர் ராஜா தமிழரசி மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு இந்நிலையை சரி செய்ய வேண்டும் என்கிற நோக்கில் 37 வது வார்டு கவுன்சிலர் ராஜா தமிழரசியை தொடர்பு கொண்டு இந்தப் பகுதிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் மக்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள் என்பதை மாமன்ற கூட்டத்தில் எப்போதாவது பேசி இதை சரி செய்ய நடவடிக்கை எடுத்து இருக்கிறீர்களா என்றோம்.
நான் கவுன்சிலராக வந்த பிறகு இந்த பகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே முனியாண்டவர் காலனி சாலையை அகலப்படுத்தி நன்கு மக்கள் பயன்படும் விதமாக போட்டுக் கொடுத்தேன் அதுமட்டுமல்லாமல் பல மருத்துவ முகாம்களும் நடத்தி இருக்கிறேன் மேலும் அருளானந்த நகர் பகுதி சாலையை போல எங்கள் பகுதியையும் தரம் உயர்த்த
நினைத்து தான் இந்த சாலையையே அமைத்தேன் இருந்த போதும் எங்களுக்கு மாநகராட்சி அதிகாரி உரிய ஒத்துழைப்பு கொடுக்க வில்லை. நாங்களும் மாநகராட்சி அதிகாரியிடம் குழாயை அப்புறப்படுத்துங்கள் அந்த இடங்களில் மரக்கன்றுகளை வைத்து சாலை ஓரங்களில் அழகு படுத்துகிறோம் அப்போதுதான் தூய்மையாக இருக்கும் என்று பலமுறை கேட்டு விட்டோம் அப்புறப்படுத்துவதாக சொல்கிறார் ஆனால் இதுவரை அந்த குழாய்கள் அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே கிடப்பதால் தான் நீங்கள் குறிப்பிட்டு கேட்பது போல தூய்மையற்ற நிலையில் அந்த பகுதி இருக்கிறது இதற்கு நாங்கள் மட்டும் காரணம் அல்ல மாநகராட்சி அதிகாரியும் தான் காரணம் என்று கையை அந்தப் பக்கம் சுட்டி காட்டினார் 37 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜா தமிழரசி.
சரிங்க நீங்கள் அவரை கைகாட்டி விட்டு சும்மா இருப்பதற்காக மக்கள் உங்களை தேர்ந்தெடுக்கவில்லை இப்பகுதி மக்களின் பிரதிநிதி நீங்கள் அந்த பொறுப்புணர்ந்து சொல்லுங்கள் சாலையில் இருக்கும் குப்பைகளை எப்போது அப்புறப்படுத்துவீர்கள் ? சாலை மேல் பயனற்று பல மாதங்களாக கிடக்கும் குழாய்களை எப்போது அங்கிருந்து எடுப்பீர்கள் என்றோம் ? சாலையில் இருக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றி விடுகிறோம். சாலை மேல் கிடக்கும் குழாயை 1 வாரத்தில் அகற்ற ஏற்பாடு செய்கிறோம் மாநகராட்சியிடம் முறையிடுகிறோம் என்று நமக்கு உறுதி அளித்தார் மாமன்ற உறுப்பினர் ராஜா தமிழரசி.
இந்த குழாயை எடுத்து அப்புறப்படுத்த ஏறக்குறைய சில மணி நேரம் போதும் என்கிற நிலையில் பல மாதங்களாக இதைக் கூட செய்யாமல் மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக உழைப்பதற்கு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் அந்த பொறுப்பற்ற அதிகாரி யார் என்று கேட்டது போது இவர் சிலர் சொல்வது போல சம்பளத்துக்கு மட்டும் வேலை பார்ப்பவர் அல்ல கிம்பளத்துக்கே அதிக வேலை பார்ப்பவர் என்பதால் மக்களாவது… மாநகராட்சியாவது… இந்தக் கட்சி ஆட்சியில் இருந்தால் என்ன ? எந்த கட்சி ஆட்சியில் இருந்தால் எனகென்ன என்கிற போக்கில் செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்களால் சொல்லப்படும் தஞ்சாவூர் மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன் என்று தெரியவந்தது.
ஏற்கனவே பல நிகழ்வுகளின் போது மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயனுக்கு நாம் அலைபேசியில் அழைத்தபோது ஒரு முறைக் கூட அழைப்பை எடுக்காதவர் இப்போது மட்டும் நமது அழைப்பை எடுப்பாரா என்ன ? நமது நோக்கம் நமது அழைப்பை அவர் எடுக்க வேண்டும் என்பதல்ல அங்கு பயனற்ற முறையில் சாலையில் கிடக்கும் குழாயை எடுக்க வேண்டும், மழைநீர் வடிகால் வாய்க்காலை முறையாக சரியாக கட்ட வேண்டும் சுகாதாரமாக மக்கள் அங்கு வாழ்கிறார்கள் என்கிற சூழலை உறுதி செய்ய வேண்டும் என்பதே நமது நோக்கம் 37 வது வார்டு கவுன்சிலர் ராஜா தமிழரசி குறிப்பிட்டிருப்பது போல இன்னும் ஒரு வாரத்தில் அங்கு இருக்கும் குழாய்கள் அப்புறப் படுத்தப்பட வேண்டும் என்ன நடந்திருக்கிறது என்பதை அக்டோபர் மாதம் வர இருக்கிற அரசியல் மாநாடு இதழிலும், Maanaadu7592 youtube சேனலிலும் வெளியிடுகிறோம்.
மாமன்ற உறுப்பினர் நமக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாரா ?
மாநகராட்சி அதிகாரி அவருக்கு ஒத்துழைப்பாரா என்பதை பார்ப்போம்.