Spread the love

மாநாடு 24 November 2023 

திருவண்ணாமலையில் தொழிற் பூங்கா அமைக்க செய்யாறு சிப்காட் வளாகத்திற்கு மேல்மா விவசாயிகளின் விளைநிலம் கையகப்படுத்துவதை அரசு கைவிடவும், விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு அமல்படுத்தக் கூடாது என்றும், சிப்காட் வளாகத்தில் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் போராடிய நூற்றுக்கணக்கான மக்கள் மீது காவல்துறை அடக்குமுறைகளை ஏவி இருப்பது கண்டனத்துக்குரியது என்றும், இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி வந்த அருள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது, உடனடியாக அருள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,

போராடிய விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி சமவெளி விவசாயிகள் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் இரயிலடி முன்பு நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்திற்கு சமவெளி விவசாயிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் சு.பழனிராஜன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம். சி.முருகேசன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், சி பி எம் எல் மக்கள் விடுதலை பொதுச் செயலாளர் கசி.விடுதலைகுமரன், மாவட்ட செயலாளர் இரா.அருணாச்சலம், ஜனநாயக விவசாய சங்க மாநில தலைவர் ராமர் ,தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன், ஜனநாயக மாதர் சங்க மாநில நிர்வாகி தமிழ்ச்செல்வி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் அ.ரெ.முகிலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர நிர்வாகி யோகராஜ் , தமிழக மக்கள் பண்பாட்டு இயக்க தலைவர் கவிஞர் பாட்டாளி, மகஇக மாநில இணைச் செயலாளர் ராவணன்,எழுத்தாளர் சாம்பான் விவசாய சங்க நிர்வாகிகள் ஆண்டவர், அம்பலராஜன், மகேந்திரன், சண்முகம், குணசேகரன், மற்றும் இடதுசாரி நிர்வாகிகள் தேவா, பொறியாளர் கென்னடி, சமூக ஆர்வலர் விசிறி சாமியார்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.. முடிவில் இடதுசாரிகள் பொதுமேடை பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார். 

72350cookie-checkஉடனடியாக ரத்து செய் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!