மாநாடு 10 July 2024
தமிழ்நாடு முழுவதும் சென்னை மாவட்டம் நீங்கலாக 37 மாவட்டங்களில் 12,525 ஊராட்சிகளும், 385 ஒன்றியங்களும் மக்கள் பணிகளுக்காக செயல்பட்டு வருகின்றன. ஏறத்தாழ 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஊராட்சிகளில் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு குறைந்தபட்ச கூலி சட்டத்தை வெளியிடப்பட்டது. ஆனால் ஊராட்சி, உள்ளாட்சிகளில் 7ஆண்டுகளாக அரசாணை அமல்படுத்த வில்லை. இந்த சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டியும் , சம வேலைக்கு சம ஊதிய வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை ஏ ஐ டி யூ சி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநில தழுவிய காத்திருப்பு போராட்டம் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு இன்று10.7.24. காலை 10 மணிக்கு சங்க மாவட்ட தலைவர் எல். கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
காத்திருப்பு போராட்டத்தினை ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர், வழக்கறிஞர் சி.சந்திரகுமார் துவக்கி வைத்து உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி ஏஐடியூசி மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம், மாவட்ட தலைவர் வெ.சேவையா, மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், தெரு வியாபார சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி. முத்துக்குமரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்கள். போராட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.செந்தில் குமார், மாவட்ட துணைத் தலைவர் செந்தமிழ் செல்வி ,மாவட்ட செயலாளர் கே.ராஜன், பாபநாசம் செயலாளர் சி.அப்புகுட்டி, ஊராட்சி செயலாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ராமதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் சங்க நிர்வாகி கை.கோவிந்தராஜ், ஆப்பரேட்டர் சங்க மாவட்ட தலைவர் கே.சாஸ்திரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் என்.தேசிங்குராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கேகுபேந்திரன் நன்றி கூறினார்.காத்திருப்பு போராட்டத்தில் ஊராட்சி உள்ளாட்சிகளில் பணிபுரிந்து வரும் அனைவருக்கும் குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி சம்பளம் வழங்க வேண்டும், கடந்த 11.10.2017 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை அமல்படுத்த வேண்டும், மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், ஊராட்சியில் பணிபுரியும் கணினி இயக்குபவர், தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை சிறப்பு ஊதியம்,தூய்மை காவலர்கள்,பள்ளி சுகாதார பணியாளர்கள், மகளிர் திட்ட தொழிலாளர்கள், கிராம சுகாதார ஊக்குனர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச கூலி சட்ட ஆணையின்படி சம்பளம் வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், பிஃஎப் தொகை பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.