Spread the love

மாநாடு 22 January 2025

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு என்கிற பெயரில் மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி ஒருங்கிணைத்ததற்கு அனுமதி அளித்ததற்கும் அங்கு நடந்த அலங்கோலத்தை கண்டித்தும் தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ. மணியரசன் வெளியிட்டு இருக்கும் கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது 

சீமான் வீட்டைப் போராட்டக்களமாக்கியதும்
கொடும்பாவிகள் கொளுத்த அனுமதித்ததும்
கண்டனத்திற்குரியவை!


நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் வீட்டை முற்றுகை இட்டுப் போராட மே 17 இயக்கத் தலைவர் தோழர் திருமுருகன்காந்தி அவர்கள் தோழமைக் கட்சியினரையும் ஈ.வெ.ரா. பற்றாளர்களையும் இன்று (22.01.2025) திரட்டிக் கொண்டு போனது மிகமிகத் தவறான செயலாகும்.

ஈ.வெ.ரா. குறித்து சீமான் பேசிய விமர்சனங்களில் உண்மைக்கு மாறானவை இருந்தால், சரியான உண்மைகளைச் சான்றுகளுடன் வெளியிட்டுக் கண்டனம் தெரிவிக்கும் உரிமை தோழர் திருமுருகன்காந்தி உள்ளிட்ட ஈ.வெ.ரா. பற்றாளர்களுக்கு உண்டு. “அவதூறுக்கு மறுப்பு” என்பதற்கு அப்பால், அதற்காக சீமான் அவர்களைக் கண்டித்து பொது இடத்தில் சனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம்.

அவ்வாறான சனநாயக வழிகளைப் புறந்தள்ளி சீமான் அவர்களின் குடும்பத்தார் வசிக்கும் நீலாங்கரைப் பகுதியில் வீட்டை நோக்கி படையெடுப்பது சனநாயகம் அல்ல! கண்டனத்திற்குரிய செயல்!

தமிழ்நாடு அரசின் காவல்துறையினர் நூற்றுக்கணக்கில், சீமான் வீடுள்ள கிழக்குக் கடற்கரை சாலையில் குவிக்கப்பட்டு நின்றார்கள். ஆனால் அவர்கள் சீமான் குடும்பத்தார் வசிக்கும் வீட்டை நோக்கி பேரணியாக வந்த ஈ.வெ.ரா. பற்றாளர்களை கூட்டமாகக் கூடுவதற்கு அனுமதித்து, இழி சொற்களில் முழக்கமிட அனுமதித்து, சீமானின் கொடும்பாவிகளை முற்றிலுமாக தீவைத்து எரித்துச் சாம்பலாக்கவும் அனுமதித்தனர். அக்கொடும் பாவிகள் எரிவதை அணைப்பது போல் பாசாங்கு பண்ணி பூட்சு காலால் காவலர் சிலர் தேய்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் முழுமையாக அணைக்க முயற்சி செய்யவில்லை. அக்கொடும்பாவிகள் முழுமையாக எரிந்து சாம்பலாகிட அனுமதித்தனர். அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து பொது இடங்களில் கொடும்பாவி கொளுத்தும் போராட்டங்கள் நடக்கும் போது காவல்துறையினர் அது நிகழாமல் தடுத்து கைது செய்வதும், அப்படியும் யாராவது கொளுத்தினால் அணைப்பதற்காக வாளிகளில் தண்ணீர் முன் கூட்டியே வைத்திருப்பதும், அத்தண்ணீரை ஊற்றி காவல் துறையினர் அணைப்பதும் தான் தமிழ்நாட்டில் உள்ள வழக்கம்!

ஆனால் சீமான் கொடும்பாவிகளைக் கொளுத்தும் போது அங்கு அணைக்கத் தண்ணீரைப் பயன்படுத்தவில்லை. தண்ணீர் வாளிகள் இல்லை. தோழர் திருமுருகன் காந்தி தலைமையில் வந்தோர் வெளிப்படையாக சீமான் கொடும்பாவிப் பொம்மைகளைத் தூக்கி வந்தபோதும், அவற்றைக் காவல் துறையினர் முன் கூட்டியே பறிமுதல் செய்யவில்லை. எரிவதை அணைக்கத் தண்ணீர் ஊற்றவும் இல்லை.

சீமான் திராவிடத்தையும் தி.மு.க.வையும் கடுமையாக எதிர்த்து பரப்புரை செய்வதால் அவரைப் பழிவாங்குவதற்காக தி.மு.க. ஆட்சி சட்டத்திற்குப் புறம்பாக – நடுநிலைதவறிச் செயல்பட காவல்துறையத் தூண்டியுள்ளது. அதிகாரத்தைப் பயன்படுத்தி அரங்கேற்றிய இப்பழிவாங்கும் செயல் கண்டனத்திற்குறியது .

கடவுள் வழிபாட்டளர்களுக்கும் – கடவுள் எதிர்பாளர்களுக்கும் சமமான சனநாயாக உரிமை இருக்க வேண்டும் என்பது பொது நீதி! ஈ.வெ.ரா.வாதிகள், “கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி, கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்” என்று ஈ.வெ.ரா. வாழ்ந்த காலத்தில் இருந்து அண்மைக் காலம் வரை கல்வெட்டுகளிலும் சுவர்களிலும் அவரின் சிலைகளின் கீழும் எழுதினார்கள்! ஏடுகளிலும் மேடைகளிலும் பரப்பினார்கள். ஈ.வெ.ரா.வின் இந்த மூன்று கண்டுபிடிப்புகளும் உண்மைகள்தானா? நிறுபிக்கப்பட்டவையா? இல்லை! ஆனால் தமிழ்நாடு இவற்றுக்கெல்லாம் உரிமை அளித்தது! இப்போது தி.மு.க. வின் திராவிட மாடல் ஆட்சியில் ஈ.வெ.ரா. மறுப்பாளர்களுக்கு கருத்துரிமை கூடாது என்று கொதிக்கிறார்கள்; குதிக்கிறார்கள்; பழிவாங்குகிறார்கள்!

அதேவேளை, தமிழ்த்தேசியர்கள் தோழர் திருமுருகன்காந்தி அவர்களைப் போல் எதிர்அரசியல் தலைவர்களின் வீடுகளைப் போராட்டக் களமாக ஆக்கக் கூடாது. என்ற சனநாயகத்தைக கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

75020cookie-checkசீமான் வீடு முற்றுகை அனுமதிக்கு பெ.மணியரசன் கடும் கண்டனம்
6 thoughts on “சீமான் வீடு முற்றுகை அனுமதிக்கு பெ.மணியரசன் கடும் கண்டனம்”
  1. BusinessIraq.com excels in tracking investment trends and opportunities across Iraq’s thriving markets. From the bustling commercial districts of Basra to the entrepreneurial hubs of Erbil, our platform monitors significant business developments, merger activities, and market expansions. Our dedicated coverage helps investors, business leaders, and market analysts understand the evolving dynamics of Iraq’s diverse economic landscape, providing crucial insights for strategic decision-making.

  2. BusinessIraq.com stands as Iraq’s leading source for comprehensive business intelligence and economic updates, delivering real-time market insights to global investors and local entrepreneurs. Our platform provides extensive coverage of Iraq’s evolving business landscape, focusing on critical developments in oil and gas, infrastructure, and financial sectors. With expert analysis and breaking news, we ensure stakeholders remain informed about Iraq’s dynamic market opportunities.

  3. The platform’s commitment to accuracy makes BusinessIraq.com an invaluable resource for understanding Iraq’s market dynamics. Our daily updates, weekly summaries, and monthly sector analyses provide deep insights into market trends, economic indicators, and business opportunities across all major industries.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!