Spread the love

மாநாடு 4 March 2025

லஞ்சம் வாங்க கொஞ்சமும் அச்சப்படாமல் லஞ்சம் வாங்கிய தஞ்சாவூர் மின்வாரிய அதிகாரிக்கு 3  ஆண்டுகள் சிறை 

மின் இணைப்பு வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 6000 ரூபாய் அபராதம் விதித்து கும்பகோணம் சிறப்பு நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் விளார் ரோடு நாவலர் நகர் பகுதியில் வசித்து வருபவர் மனோகரன். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு, தனது உறவினர் வாங்கிய வீட்டிற்கு ஏற்கனவே இருந்த மின் இணைப்புகளை உறவினர் பெயருக்கு மாற்றம் செய்வது தொடர்பாக தஞ்சாவூர் உதவி மின் பொறியாளர் இயக்ககம் மற்றும் பராமரிப்பு (மேற்கு) அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு, இதுகுறித்த விவரங்களை அலுவலகத்தில் கணக்கீட்டாளராக பணிபுரிந்த தேன்மொழி என்பவரிடம் கேட்டுள்ளார்.அதற்கு தேன்மொழி, ஆன்லைனில் விண்ணப்பம் செய்துவிட்டு அந்த விண்ணப்பங்களுடன் தன்னை வந்து பார்க்குமாறு தெரிவித்துள்ளார். மேலும், ஒரு இணைப்பிற்கு ரூ.1500 வீதம் 4500 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மனோகரன், தேன்மொழி மீது தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரைப்படி, இரசாயனம் தடவப்பட்ட பணத்தை மனோகரன் தேன்மொழியிடம் அவரது அலுவலகத்தில் வைத்து கொடுத்துள்ளார். இதனையடுத்து,காவல் ஆய்வாளர் சரவணன் லஞ்சம் வாங்கிய தேன்மோழியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியுள்ளார்.
இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி காவல் ஆய்வாளர் பத்மாவதி. இவர் ஆவணங்களை சேகரித்தும், சாட்சிகளை விசாரித்தும் விசாரணையை முடித்து, கடந்த 2023 ஆம் ஆண்டு கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிபதி மற்றும் சிறப்பு நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து, 2023 மார்ச் மாதம் 21ஆம் தேதி வழக்கு எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுள்ளது.இதில், காவல் கண்காணிப்பாளர் அன்பரசன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் பத்மாவதி, சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் சாட்சிகளை ஆஜர்படுத்தியுள்ளனர். இதனையடுத்து, துணை சட்ட ஆலோசகர் முகமது இஸ்மாயில் வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
3 ஆண்டு சிறை தண்டனை:
அதன் பேரில் வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா, தேன்மொழி (வயது 55) என்பவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார். தொடர்ந்து, அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், தண்டனை காலத்தில் ஏற்கெனவே சிறையில் இருந்த காலத்தை கழித்து கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
சாமானியர்கள் தானே இவர்கள் என்று துச்சமாக நினைத்து ‘லஞ்சம் கேட்கும் நபர்களை 9498105043,9498105549 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவியுங்கள் லஞ்ச பணம் எண்ணிய பாவிகள் கம்பி எண்ணட்டும்.
அனைத்து செய்திகளையும் அச்சமின்றி வெளிப்படுத்தி வரும் அரசியல் மாநாடு சமூக விழிப்புணர்வு , புலனாய்வு மாத இதழில், Arasiyal Maanaadu News youtube channel, Maanaadu.in மின்னிதழ், உள்ளிட்ட மாநாடு செய்தி குழுமத்தில் உங்களது செய்தியையும், மக்களின் கருத்துக்களோடு பேட்டி எடுத்து வெளியிட ஆதாரங்களோடு உங்களின் அலைபேசி எண்ணையும் இணைத்து அனுப்புங்கள் உண்மைத்தன்மை இருப்பின் உறுதியாக வெளியிடப்படும்.

75630cookie-checkதஞ்சாவூரில் லஞ்சம் வாங்க கொஞ்சமும் அஞ்சாத அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!