மாநாடு 19 March 2025
கருணை அடிப்படையில் வேலையில் சேர்ந்த விஏஓ கருணை இல்லாமல் லஞ்சத்துக்கு கை நீட்டியபோது கைது .
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த கோபிநாத் கருணை அடிப்படையில் தமிழக அரசால் வேலைக்கு சேர்ந்தார். தற்போது இவர் குடியாத்தம் அடுத்த வேப்பூர் விஏஓ வாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய விஏஓ கோபிநாத்தை அணுகியுள்ளார். அப்போது பட்டா மாறுதல் செய்து தர பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் விஏஓ கோபிநாத் .
லஞ்சம் தரவும் கூடாது அதே நேரத்தில் விஏஓ கோபிநாத்திற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்த நிஜாமுதீன் வேலூர் லஞ்ச ஒழிப்பு காவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். வேலூர் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் விஏஓ கோபிநாத்திடம் கொடுக்கச் சொல்லி ரசாயனம் தடவிய பத்தாயிரம் ரூபாய் பணத்தை நிஜாமுதீனிடம் கொடுத்து அனுப்பி உள்ளார்கள் நேற்று வேப்பூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விஏஓ கோபிநாத்திடம் நிஜாமுதீன் லஞ்சப் பணத்தை கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் கோபிநாத்தை கையும் களவுமாக பிடித்து அவரிடம் இருந்து லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டா மாறுதலுக்காக லஞ்சம் பெற்று பல விஏஓ கைது செய்யப்படுவது வாடிக்கையான செய்தி தான் என்றாலும் இதனை வேடிக்கை பார்க்கும் மக்கள் ஆச்சரியத்துடன் கைகொட்டி சிரிக்கிறார்கள் விஏஓ லஞ்ச பணம் கேட்டு கைநீட்டி கைதாகி இருப்பது குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.