மாநாடு 24 March 2025
சுமுகமாக சமூக நல்லிணக்கத்தோடு வாழும் மக்களிடத்தில் சாதி, மத வேற்றுமையை சொல்லி ஒற்றுமையை சீர்குலைக்க முற்படுபவர்கள் யாராக இருந்தாலும் அமைதியான சமூகத்தில் முளைக்கும் முட்செடிகளே, இவ்வாறானவர்களை எவ்வாறு பாடுபட்டாயினும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தட்டி தூக்கி சமூக அமைதியை காக்கும் காவல் பணியை மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் நமது தமிழ்நாடு காவல்துறை தாங்கள் மக்களுக்கானவர்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் சமூக அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில அமைப்பாளர் சரவண கார்த்திகை தஞ்சை மாவட்ட காவலர்கள் கைது செய்து சமூக அமைதியை காத்திருக்கிறார்கள் என்ன நடந்தது? எப்போது நடந்தது?..
கடந்த 17.03.2025-ம் தேதி பாபநாசம் உட்கோட்டம் அய்யம்பேட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நெடுந்தெருகிராமம் அருள்மிகு பிரசன்ன ராஜகோபால சுவாமி கோயிலுக்கு புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டதில் இஸ்லாமியர் ஒருவரை நியமித்ததாக விருதுநகர் மாவட்டம் , ராஜபாளையம், சிவகாமிபுரம் தெருவைச் சேர்ந்த 43 வயது உடைய சரவணகார்த்தி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் தவறான செய்தியை பதிவிட்டதாக நர்கிஸ்கான் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் 20.03.2025-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புலன் விசாரணையில் மேற்கண்டவாறு அறங்காவலராக நியமிக்கப்பட்ட நபர் இந்து மதத்தை சார்ந்தவர் என்பதும், தவறான தகவலை முகநூலில் பதிவிட்டு இரு மதத்தினருக்கிடையே ஒரு பதட்டமான சூழ்நிலை உருவாக காரணமாக இருந்துள்ளதும் தெரிய வருகின்றது.
இதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பாபநாசம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் அய்யம்பேட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் சாந்தி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட தனிப்படை காவல் உதவி காவல் ஆய்வாளர் அருள் தலைமையிலான காவலர்கள் அடங்கிய குழு மேற்படி குற்றவாளியான விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், சிவகாமிபுரம் தெருவைச் சேர்ந்த சரவணகார்த்தி என்பவரை நேற்று இரவு 09.30 மணிக்கு சென்னையில் கைது செய்யப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இச்செயலில் ஈடுபட்டவர் விஸ்வஹிந்து பரிசத் அமைப்பில் மாநில அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் அடங்கிய குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்கள், மக்களின் அமைதிக்காக மணி கணக்கு பார்க்காமல் பணியாற்றும் காவலர்களை மாநாடு செய்தி குழுமம் மக்களின் சார்பாக மனதார வாழ்த்தி பாராட்டுகிறது.