மாநாடு 07 May 2025
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம்
பெயரில் மட்டும்தான் மக்கள் பயன்படுத்துவதற்காகவும் பேருந்துகள் சேவை புரிய கட்டப்பட்டதாகவும் தெரிய வருகிறதே தவிர, பேருந்து நிலையத்தை கடை நடத்துவதற்காக கட்டப்பட்ட வணிக வளாக பகுதியில் ஏதோ பயணிகளும் பயன்பெறட்டும் என்கிற வகையில் பேருந்துகளை நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கியது போல தான் இருக்கிறது
நேரில் காண்பவர்களுக்கு, ஏனெனில் பேருந்து நிலையத்தில் நடைபாதை வரை கடைகளின் ஆக்கிரமிப்பு இருப்பதையும் பயணிகள், பொதுமக்கள் , மாணவ மாணவிகள், முதியோர்கள், தாய்மார்கள் நடக்க கூட இடமில்லை என்பதையும், மழை, வெயில் எது வந்தாலும் கால் தடுக்க நிற்க கூட இடமில்லை என்பதை கண்ணிருக்கும் யாவரும் காண முடியும் இதைக் கண்டும் காணாமலும் இருப்பதற்காக
மாநகராட்சி ஊழியர்கள் இந்த பகுதியின் சுகாதார ஆய்வாளர்
எபின் சுரேஷ் , திருமுருகன் RI
முதல் அவர் வரை பணம் பெற்றுக் கொள்கிறார்கள் அதனால்தான் மக்களின் பயன்பாட்டிற்காக மக்களின் பணத்தில் இருந்து கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் கிடக்கும் அவல நிலையை கண்டு களையாமல் இருக்கிறார்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
தஞ்சாவூர் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் ஊடகங்களுக்கு கொடுக்கும் பேட்டியில்
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் கண்ணனின் வழிகாட்டுதலில் தான் நாங்கள் இவ்வாறு செயல்படுகிறோம் என்று மார்தட்டி கூறுகின்றார்கள்… அப்படி இருக்கும் போது தஞ்சாவூர் மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் பல்வேறு அவல நிலையையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் வருவாய் அலுவலர் இளங்கோ, வருவாய் ஆய்வாளர் திருமுருகன், சுகாதார ஆய்வாளர் எபின் சுரேஷ் உள்ளிட்ட பலரும் மாநகராட்சி ஆணையர் கண்ணனின் வழிகாட்டுதலில் தான் பொது மக்களின் மீது பொறுப்பற்ற முறையில் அக்கறை இல்லாமல் இப்படி இருக்கிறார்களோ என்று என்ன தோணுகிறது.
மக்கள் நடக்க நடைபாதையையும், பயணிகள் வசதியாக நிழலில் நிற்க, அமரவழி வகையையும், பேருந்தில் டிக்கெட் எடுத்து வந்து பேருந்து நிலையத்தில் நோய் வாங்கி செல்லும் அளவில் சுகாதாரமற்ற முறையில் இருக்கும் அவல நிலையை மக்களின் மீது உண்மையில் அக்கறை கொண்டு செயல்படும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நிலையாக சரி செய்ய வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். தலையிட்டு பிழைகளை களைவார் என்று நம்புகிறது மாநாடு செய்தி குழுமம்.