Spread the love

மாநாடு 07 May 2025

இரவு பகல் பாராமல் பணியாற்றி மக்களுக்கு தொண்டாற்றும் காவலர்கள் இருக்கும் காவல்துறையில் புகார் கொடுத்த பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த காவலரின் செயல் அருவருக்கத் தக்க வகையில் இருந்துள்ளது என்ன நடந்தது என்பதை பார்ப்போம்;

ஆவடியில் தொலைந்து போன பைக்கை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த காவலரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இந்த பெண் கடந்த மாதம் ஆவடி செக்போஸ்ட் அருகே வேலை நிமித்தமாக இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்பொழுது அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்து வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக இது குறித்து ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் பைக் திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்ததுடன் வாகனத்தை திருடியவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருடு போன வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


இது குறித்து ஆவடி குற்ற பிரிவை சேர்ந்த காவலர் ஹரிதாஸ் புகார் கொடுத்த பெண்ணை தொடர்பு கொண்டு திருடு போன வாகனம் கிடைத்து விட்டது, வாகனத்தை பெற்றுக்கொள்ள வரும்படி அழைத்துள்ளார். மேலும், வாகனத்தை ஒப்படைக்க அப்பெண்ணிடம் ரூ.15,000 ரூபாய் பணம் கேட்டுள்ளார். ரூ.15,000 கொடுக்கும் அளவிற்கு தன்னிடம் பணம் இல்லை என்றும் ரூ.5,000 பணம் தருவதாக அப்பெண் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை பெற்றுக்கொள்ள காவலர் ஹரிதாஸ் அப்பெண்ணை மீண்டும் தொடர்பு கொண்டு நேரில் அழைத்துள்ளார். மேலும் அந்த பெண்ணிடம் பேசியவர் மிகவும் சிரமப்பட்டு வாகனத்தை கண்டுபிடித்துள்ளோம். உன் மீது எனக்கு ஆசையாக உள்ளது. என்னுடன் நீ தனிமையில் இருக்க வேண்டும். உனக்காக அறை எடுத்துள்ளேன் என்று அத்துமீறி பேசியதாக கூறப்படுகிறது ஆவடியில் உள்ள பிரபல விடுதிக்கு வருமாறும் அவர் அழைத்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ந்து போன அந்த பெண் இதுபற்றி தனது அண்ணனிடம் கூறியுள்ளார். பின்னர் அந்த பெண் தனது அண்ணனுடன் காவலர் கூறிய இடத்துக்கு சென்று அங்கு காவலருக்கு சந்தேகம் வராமல் இருக்க இருவரும் தனி தனியாக இருந்துள்ளனர். பின்னர் காவலர் ஹரிதாஸ் அந்த பெண்ணை விடுதிக்கு அழைத்து செல்வதை பின் தொடர்ந்தபடியே கவனித்த பெண்ணின் அண்ணன் விடுதி நுழைவு வாயிலில் வைத்து காவலரை கையும் களவுமாக பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.


இதனையடுத்து விடுதி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தகாத முறையில் நடக்க முயன்ற காவலரை மீட்டு அங்கிருந்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது அண்ணன் ஆவடி காவல் உதவி ஆணையரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆணையர் கனகராஜ் காவலர் ஹரிதாசிடம் விசாரணை நடத்தினார். பின்னர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனை அடுத்து காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

79880cookie-checkலஞ்சம் மட்டும் போதாது மஞ்சத்துக்கும் வா என்று அழைத்த காவலர், பெண் புகார் விசாரணை
One thought on “லஞ்சம் மட்டும் போதாது மஞ்சத்துக்கும் வா என்று அழைத்த காவலர், பெண் புகார் விசாரணை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!