விவசாயிகள் முற்றுகை போராட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல முற்றுகையிட தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி அழைப்பு விடுத்து இருந்தார் அதற்கு வலு சேர்க்கும் வகையில் பல நெருக்கடியான இந்த நேரத்திலும் விவசாயிகள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது கடந்த 2020-21 விவசாயிகள் செலுத்திய பயிர்காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
பயிர் செய்யாத தரிசு நிலங்களுக்கு முறைகேடாக சான்றிதழ் வழங்கியது மட்டுமல்லாமல் விவசாயிகளையும் தரக்குறைவாக பேசிய கங்கரக்கோட்டை கிராம நிர்வாக அலுவலரை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று. அப்போது விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தையும் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகளையும் கண்டித்து கண்டன முழக்கங்களையும் எழுப்பினார்கள்.
இந்த போராட்டத்தில் சுமார் 200 க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்
அதனையொட்டி விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள்.விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் 50 க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.