மாநாடு 18 August 2025
நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு விளைவிக்கும் சாராயக்கடையை தனியார் நடத்தி வந்த நிலையில் அப்படியெல்லாம் மதுபான கடையை தனியார் நடத்த இனியும் அனுமதி கிடையாது அதனை நடத்த சரியான தகுதி வாய்ந்தவர்கள் நாங்கள் தான் என்பது போல காட்டிக் கொண்டு தனியார் நடத்திய மதுபான கடைகளை தமிழக அரசு தானே எடுத்து நடத்தி சாராயக்கடை, மதுபான கடை என்று இருந்த பெயரை எல்லாம் மாற்றி டாஸ்மாக் கடை என்று பெயர் வைத்துக் கொண்டு, பலர் இதனை இழுத்து மூட வேண்டும் என்று போராடிய போதும், சசி பெருமாள் போராடி உயிர்விட்ட போதும் கூட அதெல்லாம் முடியாது கொஞ்சம் கொஞ்சமாக தான் குறைப்போம் என்று சொல்லிக்கொண்டு மக்கள் தொகையை குறைக்கவும் மக்களிடம் கொஞ்சம்.. நஞ்சம் உள்ள ஒழுக்கத்தை கெடுக்கவும் காரணமான டாஸ்மாக்கை அரசு நடத்தி வரும் நிலையில், இவர்கள் அவர்கள் என்று பாராமல் அனைவருக்கும் நோய் பரவலை தடுத்து, சுகாதாரத்தை காத்து, வெயில் என்றும் மழை என்றும் பாராமல் கொரோனா போன்ற கொடிய காலங்களில் கூட தன்னுயிரைப் பற்றி கவலை கொள்ளாமல் பலரின் இன்னுயிரைக் காத்த மாமனிதர்கள் தூய்மை பணியாளர்கள். “எங்களை பணி நிரந்தரம் செய்யுங்கள், தனியாரிடம் தாரை வார்த்து விடாதீர்கள் என்று கோரிக்கை வைத்து 13 நாட்களாக தொடர் போராட்டத்தில் சென்னையில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை இரவோடு இரவாக நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதாக காட்டிக் கொண்டு அடக்கி ஒடுக்கினார்கள் ஆனாலும் தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கையை வாக்களித்த மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்கள் சென்னையில் நடைபெற்ற போராட்டம் அவ்வளவு வீரியமானது என்பதை அனைவரும் ஆழ்மனதார ஆதரித்தனர் என்பதே எதார்த்தம், அதனைத் தொடர்ந்து சென்னையைப் போலவே
மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பிரிவு ஒப்பந்த பணியாளர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலை முதல் மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்
மதுரை மாநகரை குப்பை நகரமாக மாற்றிய அவர்லேண்ட் தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்திட வேண்டும். துப்புரவு மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு அரசாணை 62 (2D)ன்படி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26,000 வழங்கப்பட வேண்டும். தினக்கூலி தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸாக ஒரு மாத சம்பளம் வழங்கப்பட வேண்டும். கொரோனா கால ஊக்கத்தொகை 15,000 ரூபாய் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தூய்மை பணியாளர்கள் தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதாக அறிவித்துள்ளனர். இதனால் மாநகராட்சியின் துப்புரவு சேவைகள் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.
தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில், முதற்கட்டமாக மாநகராட்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் காத்திருப்பு போராட்டத்தை தொடர்வதாக தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மாநகராட்சி சுகாதார அலுவலர் மருத்துவர் இந்திராவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை ஒரு மணி நேரமாக நடைபெற்ற நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
மதுரை மாநகராட்சி ஆணையரிடம் தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகள் குறித்து ஆலோசித்த பின்னர், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக கூறிய நிலையில் தூய்மை பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். தொழிலாளர் உதவி ஆணையர் முன்னிலையில் முத்தரப்பு ஒப்பந்தம் போட வேண்டும் என்று தூய்மை பணியாளர்கள் கோரிக்கை வைத்த நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது மீண்டும் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது.
Good post sir